இந்தியா- ஈரான் ஆகிய இரு நாடுகளுக்கு
இடையேயான வணிகம் மற்றும் பொருளாதார உறவுகளை மேம்படுத்த, இரு நாடுகளும்
ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி
கேட்டுக்கொண்டார்.
ஜனாதிபதி மாளிகைக்கு வருகை தந்த ஈரான் நாடாளுமன்ற உறுப்பினர்களை வரவேற்கும்போது
பிரணாப் முகர்ஜி கூறினார்.
உணவு பாதுகாப்பு, தீவிரவாதத்தை ஒழித்தல், பருவநிலை மாற்றம் உள்ளிட்ட
விவகாரங்களில் இந்தியாவும் ஈரானும் இணைந்து செயல்பட வேண்டும் என்றும்,
ஆப்கானிஸ்தானில் அமைதியை நிலைநாட்டும் நடவடிக்கைகள் தொடர்பாக இரு நாட்டுப்
பிரதிநிதிகளும் தொடர்ந்து தகவல்களைப் பரிமாறிக் கொள்வது மகிழ்ச்சி அளிக்கிறது என
பிரணாப் கூறினார்.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஈரான் மீது பொருளாதார தடைகளை விதித்துள்ள
நிலையில் இந்தியா பொருளாதார உறவுகளை மேம்படுத்த நினைப்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment