அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Thursday 28 February 2013

ஐ.டி. நிறுவனங்களில் பணியாற்றும் பெண்களில் 50 சதவீதம் போதைக்கு அடிமை. ஓர் அதிர்ச்சி ஆய்வு.


28  February  2013    
www.thedipaar.com

பணிச்சுமை, வயதாகியும் திருமணம் ஆகாதாதது, தனிமை, மன அழுத்தம், தவறான வழிகாட்டுதல் போன்ற காரணங்களால் நடுத்தர குடும்பத்தை சேர்ந்த பெண்கள் அதிகளவில் போதைக்கு அடிமையாகி வருகின்றனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ஐ.டி நிறுவனங்களில் பணியாற்றும் பெண்களில் பலர், தங்கள் ஆண் நண்பர்களுடன் சேர்ந்து பார்ட்டி, கெஸ்ட் ஹவுஸ் என்று சுற்றுகின்றனர். ஐ.டி. நிறுவனங்களில் பணியாற்றும் பெண்களில் 50 சதவீதம் பேர் ஏதாவது ஒரு வகை போதை பொருளை பயன்படுத்தி வருகின்றனர் என்று சர்வதேச போதை ஒழிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை:

பெண்களில் மேல்தட்டு வர்க்கத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே தவறான நட்பு, பழக்கம் காரணமாக போதைப் பொருட்களை பயன்படுத்தி வந்தனர்.

தற்போது நடுத்தர வர்க்கத்தினரும் போதை பொருட்களை பயன்படுத்த தொடங்கியுள்ளனர். சமுதாய, கலாசார மாற்றம், வாழ்க்கை மாற்றம் காரணமாக பெண்களில் பலரும் மது குடிக்க தொடங்கியுள்ளனர். பெண்களில் பலர் தங்களது ஆண் நண்பர்களால் தவறான பாதைக்கு தள்ளப்படுகின்றனர். இந்த போக்கு ஐ.டி. நிறுவனங்களில் மட்டுமே அதிகமாக உள்ளது. இதற்கு காரணம் பெண்களுக்கு உள்ள பணிச்சுமை. பணிச்சுமையை தவறாக பயன்படுத்திக் கொள்ளும் உயர் அதிகாரிகள், பெண்களுக்கு போதை பழக்கத்தை கற்றுத் தருகின்றனர். முதலில் பொழுதுபோக்காக போதைப் பொருட்களை பயன்படுத்த தொடங்கிய பெண்கள் அதையே பின்பற்ற தொடங்கி விட்டனர்.

அடிக்கடி உடல்நல குறைவு, மன அழுத்தம், தனிமை, வயதாகியும் திருமணம் நடக்காததது, பணியிடத்தில் உள்ள சில பிரச்னைகள் காரணமாக பெண்கள் போதைக்கு அடிமையாகி வருகின்றனர். பெண்களில் பலரும் மது பானங்களை அதிகம் பயன்படுத்துகின்றனர். மேல் தட்டு ரகத்தில் சிலர் கோகைன், ஸ்காட்டசி, ஹெராயின், மார்பின், பிரவுன் சுகர் போன்றவற்றை அதிகம் பயன்படுத்துகின்றனர். மெட்ரோ நகரங்களில் வசிக்கும் பெண்களில் பெரும்பாலானோர் போதைக்கு அடிமையானவர்கள். சரியான வழிகாட்டுதல், மன நல ஆலோசகரின் அறிவுரைகள், போதையில் இருந்து விடுபடுவதற்கான சிகிச்சை போன்றவற்றால் அவர்களை மாற்றினால்தான் வருங்கால சமுதாயம் நல்ல சமுதாயமாக அமையும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

news  thedipaar thanks

No comments:

Post a Comment