அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Thursday 28 February 2013

நீதிமன்றத்தில் ஆஜராக விஜயகாந்த் ஏறிய படியில் கிடந்த கத்தி. திண்டுக்கல்லில் பரபரப்பு.


01  March  2013   
www.thedipaar.comஅவதூறு வழக்கில், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், திண்டுக்கல் கோர்ட்டில் ஆஜரானார். அவர் இறங்கி வந்த படிக்கட்டில்,கத்தி கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திண்டுக்கல்லில், கடந்த, ஆக., 1ம்தேதி, தே.மு.தி.க., சார்பில் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. இதில் பங்கேற்ற விஜயகாந்த், முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக, அரசு வழக்கறிஞர் ஜெயபாலன், திண்டுக்கல் மாவட்ட கோர்ட்டில் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கில், நேற்று ஆஜராகும்படி, விஜயகாந்த்க்கு, மாவட்ட நீதிபதி பால சுந்தரகுமார் உத்தரவிட்டிருந்தார். இதன்படி, விஜயகாந்த் நேற்று கோர்ட்டில் ஆஜரானார்.


தள்ளுமுள்ளு : திண்டுக்கல் மாவட்ட கோர்ட்டிற்கு, விஜயகாந்த் வருவதையறிந்த கட்சி தொண்டர்கள், காலை 8:00 மணி முதல், குவிய துவங்கினர். கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினர். தொண்டர்கள் தள்ளுமுள்ளுக்கு இடையே, விஜயகாந்த், காலை 11:10 மணிக்கு கோர்ட்டில் ஆஜரானார்.

எதிர்ப்பு : மாவட்ட கோர்ட்டில், தே.மு.தி.க., வழக்கறிஞர்கள் உட்பட, பலர் கூடியிருந்தனர். அப்போது, விஜயகாந்த் உள்ளே நுழைந்து, நீதிபதி முன் ஆஜரானார். வழக்கறிஞர் ஜெயபாலன், அவரை விசாரணை கூண்டில் நிற்க வைக்குமாறு, நீதிபதியிடம் கேட்டார். இதற்கு, தே.மு.தி.க.,வினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, மார்ச், 27 ம்தேதிக்கு,வழக்கை நீதிபதி, ஒத்தி வைத்தார்.

படிக்கட்டில் கத்தி : விஜயகாந்த், முதல் தளத்தில் உள்ள மாவட்ட கோர்ட்டில் ஆஜராகி விட்டு கீழே இறங்கி வந்த போது, படியில் கத்தி ஒன்று கிடந்தது. அதிர்ச்சியடைந்த போலீசார் அவற்றை உடனே அகற்றினர். விஜயகாந்த் அதே படிகள் வழியே மாவட்ட கோர்ட்டிற்கு செல்லும் போது இல்லாத கத்தி, திரும்பி வரும் போது கிடந்ததால், பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் விசாரித்து வருகின்றனர்

/thedipaar thanks

No comments:

Post a Comment