- Saturday, 23 February 2013 06:20

கும்பமேளா நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்கள் எத்தனை பேர் என்று விவரம் கேட்டு மத்திய அரசுக்கு லக்னோ உயர்நீதி மன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
உத்திரப்பிரதேசம் மாநிலம் அலகாபாத்தில் உள்ள திரிவேணி சங்கமத்தில் கும்பமேளா நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து கோடிக்கணக்கான பகதர்கள் அன்றாடம் கலந்து கொள்கின்றனர். கடந்த 10ம் திகதி பௌர்ணமி தினத்தன்று, ஒரே நாளில் 3 கோடி பக்தர்கள் திரண்டனர். இதனால் அலகாபாத் ரயில் நிலையத்தில் கூட்டம் நிரம்பி வழிந்தது.
அப்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி ஏராளமானோர் உயிரிழந்து இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. நெரிசலில் உயிரிழந்தோர் எண்ணிக்கையை அரசு குறைத்து வெளியிட்டு இருப்பதாக அக்குற்றசாட்டு எழுந்துள்ளது. இது குறித்து லக்னோ உயர்நீதி மன்றத்தில் 3 பொதுநல வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
மூன்று பொதுநல வழக்குகளையும் விசாரித்த ஒரே அமர்வு நீதிபதிகள், கும்பமேளா நெரிசல் குறித்து அறிக்கைத் தாக்கல் செய்ய மாநில அரசு மற்றும் ரயில்வேக்கு, கடந்த 12ம் திகதி உத்தரவிட்டது. மாநில அரசின் சார்பில் நேற்று அறிக்கைத் தாக்கல் செயப்பட்டது. அதில் 36 பேர் பலியானதாக குறிப்பிடப் பட்டு இருந்தது.
இதில் திருப்தி அடையாத நீதிபதிகள், கும்பமேளா நெரிசல் சம்பவத்தில் உண்மையான பலி விவரம் குறித்து விசாரணை நடத்த மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர். கும்பமேளாவுக்கு வந்து காணாமல் போனவர்கள் பற்றிய விவரங்களை பத்திரிக்கை மற்றும் தொலைகாட்சி வாயிலாக கண்டறிய வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.
நெரிசல் ஏற்பட்ட போதும், அதன் பின்னரும் தேசிய பேரிடர் மேலாண்மை குழு என்ன செய்து கொண்டு இருந்தது என்று கேள்வி எழுப்பினர். இதில் ரயில்வே பேரிடர் மேலாண்மை பங்கு குறித்தும் கேள்வி எழுப்பினர். இதுத் தொடர்பாக விரிவான அறிக்கை அளிக்கவேண்டும் என்று, மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்
.4tamilmedia thanks
No comments:
Post a Comment