அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Wednesday 27 February 2013

பக்காத்தான் அறிக்கையில் இந்தியர்கள் விடுபடவில்லை- அன்வார் உத்தரவாதம்



பக்காத்தான்  அறிக்கையில் இந்தியர்கள் விடுபடவில்லை- அன்வார் உத்தரவாதம்
கோலாலம்பூர்,பிப்-26
இந்தியர்கள் உள்பட எந்தச் சமூகமும் புறக்கணிக்கப்படவில்லை என்று அன்வார் இப்ராகிம் கூறினார். 10 வாக்குறுதிகளின் ஒன்றான கல்வியை அடுத்துக்காட்டாக கூறிய அவர், சீன, தமிழ்ப் பள்ளிகளுக்கும் மிஷனரி பள்ளிகளுக்கும் உதவி அளிக்கப்படும் என்றார். பக்காத்தான் கொள்கை விளக்க அறிக்கையில் இந்திய சமூகத்துக்கென தனிக்கொள்கைகள் குறிப்பிடப்படாதது ஏன் என்று கேட்டதற்கு அன்வார் இவ்வாறு விளக்கினார்.

அதுமட்டுமல்ல, குறிப்பிட்ட ஒரு சமூகத்தை மட்டுமே அது குறியாகக் கொள்ளவில்லை. இது மலாய்க்காரர்கள், சீனர்கள், இந்தியர்கள், கடாசான்கள், டாயாக்குகள்- என ஒவ்வொரு குடிமகனுக்கும் மதிப்பளிக்கப்படுகிறது, கவனம் செலுத்தப்படுகிறது என்பதற்கு உத்தரவாதம் வழங்கினார்.
கல்வி முக்கியமான பிரச்னை என்பதால் அதன் தொடர்பில் சொல்லப்பட்டதை ஏற்றுக்கொண்டார்கள். ஓரங்கட்டப்படுதல், சமூகத்தில் நிலவும் குற்றச்செயல்கள் பற்றியெல்லாம் கேள்வி எழுப்பினார்கள். இவற்றுக்கு இன அடிப்படையில் அல்லாமல் தேசிய ரீதியில் பக்காத்தானின் கொள்கையில் அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது.
மக்கள் நலம்பேணும் கொள்கைவிளக்க அறிக்கை. இது உயரும் விலைவாசி, பொருள்கள், வெட்டுமரம், நல்ல நிர்வாகம், எல்லா வகைப் பள்ளிகளுக்கும் உதவியளித்தல் முதலிய விசயங்கள் பற்றிப் பேசுகிறது. பிஎன் கொள்கைவிளக்க அறிக்கை போன்றதல்ல என்பதை வலியுறுத்திய அன்வார் பக்காத்தானின் கொள்கைவிளக்க அறிக்கை இன எல்லைகளைத் தாண்டிச் செல்கிறது என்றார்.

vanakkammalaysia. thanks

No comments:

Post a Comment