அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Wednesday 27 February 2013

பக்காத்தான் தேர்தல் கொள்கை– இந்தியர்கள் நிலை என்ன? சம்புலிங்கம் கேள்வி



பக்காத்தான் தேர்தல் கொள்கை– இந்தியர்கள் நிலை என்ன? சம்புலிங்கம் கேள்வி
பக்காத்தான் தேர்தல் கொள்கை– இந்தியர்கள் நிலை என்ன? சம்புலிங்கம் கேள்வி
கோலாலம்பூர், பிப்-26
நேற்று 25 பிப்ரவரி 2013 திங்கள் கிழமை தடபுடலாக பக்காத்தான் ராக்யாட் அரசியல் கூட்டணி ஏற்பாடு செய்திருந்த 13ஆவது பொதுதேர்தலுக்கான கொள்கை விளக்க கூட்டத்தில்  இந்திய சமூகத்திற்கு  அம்போ என்று கை விரித்து விட்டார்கள், என ஹிண்ட்ராப்பின் துணைத் தலைவர் வி.சம்புலிங்கம் பரபரப்பான அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

மலாய், சீன, ஓராங் அஸ்லி, சபா,சரவாக் சமூகங்களுக்கு பிரத்தியேக திட்டங்களை வகுத்த அவர்கள் இந்திய சமூகத்தை நட்டாற்றில் விட்டு விட்டார்கள். இந்தியர்கள் தொடர்ந்து ஏமாறுவதற்கு தயாராக இருக்க வேண்டும் என்று சொல்லாமல் சொல்லி இருக்கிறார்கள் பக்காத்தான் தலைவர்கள்.

மற்ற  இனத்தவர்களுக்கென்று அவர்களின் தேவை அறிந்து திட்டம் வகுத்த இவர்கள் நம் தமிழ் பள்ளிகளை அரசு பள்ளிகளாக மாற்றுவது பற்றியோ, முறையான பிறப்பு பத்திரம் மற்றும் மை கார்ட் இல்லாதவர்கள் பற்றியோ, முன்னாள் தோட்ட தொழிலாளர்களின் முன்னேற்றம் பற்றியோ, தற்போது தோட்டங்களில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப் படும் அபாயத்தில் இருப்பவர்களுக்கான வீட்டுடைமை பற்றியோ, பல்கலைக்கழகங்களில் நம் மாணவர் சேர்கை உயர்த்தப்படுவது பற்றியோ, இந்திய மாணவர்களுக்கான கல்வி உபகார திட்டங்கள் பற்றியோ, தொழில் கல்வி கூடங்களில் நம் மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப் படுவது பற்றியோ,இந்தியர்களுக்கு அரசாங்க வேலை வாய்ப்பு பற்றியோ, ஆலய மற்றும்  இடுகாடு  நிலங்கள் பற்றியோ, இந்தியர்களுக்கான  வியாபார ஊக்குவிப்பு திட்டங்கள் பற்றியோ, இந்திய தொழில் முனைவர் திட்டங்கள் பற்றியோ,  ஒரே ஒரு வரி கூட பாக்கத்தான் தேர்தல் கொள்கை அறிக்கையில் இடம் பெற வில்லை.

மலாய் சமூகம் பயனடையும் வகையில்  பக்காத்தான் தரப்பின் தேர்தல் வாக்குறுதிகள் :

1. திரும்ப செலுத்தப் படாத PTPTN கல்வி கடன் தொகைகள் தள்ளுபடி செய்யப்படும். PTPTN   கடன் உதவி மூலம் பெருமளவில் பயனடைந்தவர்கள் மலாய் சமூக மாணவர்கள் என்பது உலகறிந்த ரகசியம்.  இதன் மூலம் மக்களிடமிருந்து பெறப்பட்ட வரிப் பணம், கடனை திருப்பி செலுத்தாத பொருப்பில்லாதவர்களின் செயலை  நியாப் படுத்துகிறது.
2. FELDA  குடியேற்றக்காரர்களுக்கு நியாயம் வழங்கப்படும். இத்திட்டத்திலும் மலாய் சமூகத்தினர் அடைந்திருக்கும் பயன் உலகறிந்த விழயம்.
3. முன்னாள் இராணுவத்தினருக்கு 500 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்படும். அவர்களுக்கான சங்கதிற்க்கான தற்போதைய  அரசாங்கத்தின் ஒதுக்கீட்டை 15 விழுக்காட்டிலிருந்து ஐந்து விழுக்காடு அதிகரிக்கப் பட்டு 20 விழுக்காடாக உயர்த்தப்படும். இராணுவத்தில் உள்ளவர்களுக்கு ஆண்டுக்கு 2000 ரிங்கிட் இலாப ஈவு வழங்கப்படும். ராணுவத்தில் 95 விழுக்காட்டிற்கும்   அதிகமானவர்கள்  மலாய்க்காரர்கள்.
4.அரசு சார்ந்த நிறுவனங்களில் மேலும் அதிகமான பூமிபுத்திரா தொழில்முனைவர்கள் உருவாக்குதல்.
5. தாபுங் ஹாஜி ( Tabung  HAJI )   நிதியளிப்பை இரு மடங்காக உயர்த்துவது.
6. இஸ்லாமிய இலாக்காகளுக்கு நிதியளிப்பை உயர்த்துவது.
7. வாகாவ் நிலங்களின் மதிப்பை உயர்த்துவது 
ஹிண்ட்ராப்பின் துணைத் தலைவர் வி.சம்புலிங்கம்
சபா மற்றும் சரவாக் மாநில மக்களுக்கான திட்டங்கள் ;

1. பெட்ரோல் உரிமத்தை 5 விழுக்காட்டிலிருந்து 20 விழுக்காடாக உயர்த்துவது .
2. சபா, சரவாக் மாநிலத்தை சேர்ந்தவர்களை அரசு உயர் பதவிகளில் நியமித்து இலாக்ககளை அவர்கள் மூலம் வழி நடத்துவது.
3. குடியுரிமை வழங்கப்பட்டவர்களின் பட்டியலை சரிபார்த்து விலக்குவது.
4. பாரம்பரிய நிலஉரிமைகளை அங்கீகரிப்பது.
5. பொது கட்டுமான வசதிகளை உயர்த்துவது.

ஓராங் அஸ்லி எனப்படும் பூர்வீக மக்களுக்கான திட்டங்கள்.

1.ஓராங் அஸ்லி மக்களின் பாரம்பரிய நிலங்களை பாதுகாத்து அவர்களின் சமூக நலனை பாதுகாப்பது
2. 141,000 ஹெக்டர் , அதாவது 348418 - ஏக்கர்  நிலத்தை ஒதுக்குவது. 
3. பூர்வீக மக்களின் குடியிருப்பு பகுதிகளுக்கு தண்ணீர் மற்றும் மின்சார இணைப்புகளை ஏற்படுத்தி தருவது.
4.ஓராங் அஸ்லி மாணவர்களுக்கு பிரத்தியேக 5000 கல்வி உபகார சம்பளம் வழங்குவது ( இலவச  கல்வி என்று சொல்கிறார்கள் ஆனால் இந்த உபகார சம்பளத்தை எப்படி , எதற்கு என்று அர்த்தப்படுத்துவது என்பது அவர்களுக்குத்தான் வெளிச்சம்.

சீன சமூகத்திற்கு பக்கத்தான் திட்டம் 

ஒருங்கிணைக்கபட்ட  சீன உயர்நிலை  பள்ளிகளின் பாடத்திட்டத்தை -அதாவது 60 சீன  உயர்நிலைப்பள்ளிகளில் ,சீன மொழியில்  தேர்வு எழுதும் கல்வித் திட்டம் -  அங்கீகரித்து பல்கலைக் கழக படிப்பை தொடர வகை செய்வது.

தொடர்ந்து வஞ்சிக்கப்படும் மலேசிய இந்தியர்களுக்காக பாக்கத்தான் கூட்டணி அறிவித்து இருக்கும் திட்டம்;

 .......  ஒன்றுமே இல்லை...... !!!!!!

மற்ற சமூகங்களுக்கு பிரத்தியேகமாக , குறிப்பிட்டு மேற்கூறிய திட்டங்கள் அறிவிக்கப் பட்டுள்ளன. ஆனால் இந்தியர்களுக்கு ஒன்றுமே இல்லை. இதற்கு அவர்களின் பதில் அணைத்து இனத்தவருக்கும் வகுத்திருக்கும் திட்டங்கள் மூலம் இந்தியர்களும் பலனடைவார்கள் என்ற நொண்டி சமாதானமாகும் !

ஆட்சி மாற்றத்தை ஏற்ப்படுதுவதில் ஹிண்ட்ராப் அமைப்புக்கும் உடன்பாடுதான் , ஆனால் அதனால் இந்தியர்களுக்கும் விடிவு பிறக்க வேண்டும் என்பதே ஹிண்ட்ராப் அமைப்பின் எதிர்பார்ப்பாகும்.

ஆட்சி மாற்றம் என்று சொல்லிக்கொண்டு கண்மூடித் தனமாக பக்கத்தான் கட்சிகளை ஆதரித்து நம் இந்திய வம்ச எதிர்கால சந்ததியினரின் வாழ்கையை குழி தோண்டி புதைக்க தன்மானமுள்ள இந்தியர்கள் முன்வரக் கூடாது.
பாரிசான் ஆட்சியில் மறுக்கப்பட்ட நம் உரிமைகள் குறித்து தெளிவாக இருக்கும் நாம், பக்காத்தான் தலைவர்களின் அலட்சிய  போக்கையும் தெளிவாக உணர வேண்டும். எதிர்கால சந்ததியினர் தங்கள் உரிமை அனைத்தையும் இழந்து கண் கலங்கி நிற்கும் சோகத்திற்கு நாம் காரணமாகி விடக் கூடாது. அரசியல் லாபத்திற்காகவும், பதவிகளுக்காகவும் நாம் சோரம் போய்விடக் கூடாது.

ஹிண்ட்ராப் முன்வைத்திருக்கும் இந்தியர்களுக்கான பிரத்தியேக திட்டங்களுக்கு எழுத்து பூர்வ சம்மதம் அளிக்கும் வகையில் பாரிசான் மற்றும் பக்கத்தான் கட்சிகளுக்கு ஒன்றாக இணைந்து நெருக்குதல் அளித்து  நம் உரிமைகளை தற்காத்து நிலை நிறுத்த தவறினால், நம்மை நாமே குறை கூறிக் கொள்ள வேண்டுமே தவிர அரசியல் கபட நாடகத்தை அரங்கேற்றிகொண்டிருக்கும் அரசியல்வாதிகளையல்ல   என்பதை தெளிவாக புரிந்து கொள்வோம்.

இந்தியர்களின் வாக்குகளை மட்டுமே குறி வைத்து வட்டமிடும் அரசியல் கழுகளிடமிருந்து நம் இளைய சமுதாயத்தை பாதுகாப்போம் என்றும் ஹிண்ட்ராப்பின் துணைத் தலைவர் வி.சம்புலிங்கம் வணக்கம் மலேசியாவிடம் தந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

vanakkammalaysia. thanks

No comments:

Post a Comment