அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Saturday 23 February 2013

வங்கிகளாக மாறும் இந்திய அஞ்சல் துறை. தனியார்களும் களமிறங்குவதால் போட்டி அதிகரிப்பு.


24  February  2013  
www.thedipaar.comஇந்திய அஞ்சல் துறை, வருவாயை அதிகரிக்கும் நோக்கில், வங்கி வர்த்தகத்தில் களமிறங்க திட்டமிட்டுள்ளது. இதனால், குக்கிராம மக்களும் வங்கிச் சேவை வாய்ப்பை பெறுவர்
என, எதிர்பார்க்கப்படுகிறது.இணையதளம் வாயிலான மின்னஞ்சல் சேவை அறிமுகத்திற்குப் பிறகு, அஞ்சல் அட்டையை பயன்படுத்துவது, பெரும்பாலும் குறைந்து விட்டது.

நொடிப்பொழுதில், மின்னஞ்சலில் செய்திகளை பரிமாறிக் கொள்ளும் காலத்தில், அஞ்சல் அட்டை அல்லது அஞ்சல் உறை வாயிலாக, தகவல் அனுப்ப யார்தான் விரும்புவர்?
தகவல் பரிமாற்றம்:எனினும், இந்தியாவில், இன்றும் மின்வசதி இல்லாத குக்கிராம மக்களுக்கு, அஞ்சல் அட்டை தான், தகவல் பரிமாற்றத்திற்கான வடிவமாக உள்ளது.கடிதம், தந்தி,தொலைநகல் என, பல்வேறு வர்த்தகத்தில், பல ஆண்டுகளாக போட்டியே இல்லாமல் செயல்பட்டு வந்த அஞ்சல் துறை, காலத்தின் தொழில்நுட்ப மாற்றத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் திணறி வருகிறது.

வீழ்ச்சி கண்ட பாரம்பரிய வர்த்தகத்தை மேம்படுத்தவும், சரிவடைந்த வருவாயை உயர்த்திக் கொள்ளவும், இதர சேவை சார்ந்த வர்த்தகத்திலும் அஞ்சல் துறை ஈடுபட்டு வருகிறது.தொலைபேசி, மின்சாரக் கட்டணங்கள் வசூலிப்பது என்பன உள்ளிட்ட, பல்வேறு சேவைகள் வாயிலாக, வருவாயை பெருக்கும் வழிகளை நாடி வருகிறது.
இந்நிலையில், வங்கித் துறையிலும் கால் பதிக்க அஞ்சல் துறை திட்டமிட்டுள்ளது.

நாட்டில், வங்கிக் கிளைகள் இல்லாத கிராமத்திலும், அஞ்சலக கிளைகள் உள்ளன. இது, அஞ்சல் துறைக்கு சாதகமான அம்சமாக இருக்கும் என, கருதப்படுகிறது.அஞ்சல் வங்கி துவங்கும் திட்டம் குறித்து, அஞ்சல் துறை சார்பாக, எர்னஸ்ட் அண்டு யங் நிறுவனம் ஆய்வு மேற்கொண்டு வருகிறது. இந்நிறுவனத்தின் ஆய்வறிக்கை, வரும் ஏப்ரல் மாதம், தாக்கல் செய்யப்படும் என, தெரிகிறது.

அமைச்சரவை குழுஇதுகுறித்து, மத்திய அமைச்சரவைக் குழு பரிசீலித்து, ஒப்புதல் வழங்கிய பின்பே, வங்கி வர்த்தகத்தில், அஞ்சல் துறை களமிறங்க முடியும் என, மத்திய தொலை தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அஞ்சல் வங்கி துவங்க அனுமதி கிடைத்ததும், அஞ்சல் துறைக்கு சொந்தமான, 24 ஆயிரம் மாவட்ட அலுவலகங்கள் மற்றும் 1.55 லட்சம் அஞ்சலகங்கள், வங்கிச் சேவையை வழங்கும்.மேலும், நாடு தழுவிய அளவில், 1,000 ஏ.டி.எம்.,கள் அமைக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது. அடுத்த இரண்டு ஆண்டுகளில், நாடு முழுவதும் உள்ள அஞ்சலக கிளைகளில், அஞ்சல் வங்கிப் பணிகள் மேற்கொள்ளப்படும்.

ஒருங்கிணைப்பு வசதிவங்கிக் கிளைகள், மின்னணு தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு வசதிகளை கொண்டிருப்பது போன்று, நாடு முழுவதும் உள்ள அஞ்சலக கிளைகளுக்கு இடையிலும், இத்தகைய வசதிகள் ஏற்படுத்தப்படும்.இதன் மூலம், சிறிய கிராமத்தில் வசிப்பவர்களும் வங்கிச் சேவையை, அஞ்சலக கிளைகளில் பெறலாம்.மேலும், வங்கிச் சேவை மூலம், அஞ்சல் துறையும் குறிப்பிடத்தக்க வருவாயை ஈட்டும்.

வங்கி வர்த்தகத்தில், அஞ்சல் துறை கால் பதிக்க உள்ள நேரத்தில், தனியார் நிறுவனங்களும்
வங்கித் துறையில் நுழைவதற்கான புதிய விதிமுறைகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.
இதன்படி, குறைந்தபட்சம், 500 கோடி ரூபாய் மூலதனத்துடன், 10 ஆண்டுகள் சிறப்பாக செயல்பட்ட நிறுவனங்களுக்கு மட்டுமே, வங்கி துவங்க அனுமதி வழங்கப்படும்.
விதிமுறைகள்:மேலும், தனியார் நிறுவனங்கள் துவங்கும் வங்கிகளில், அன்னிய முதலீட்டு வரம்பு, 49 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வங்கி துவங்கி, மூன்று ஆண்டு களுக்குப் பின்னர், கண்டிப்பாக, அவ்வங்கிகளின் பங்குகள், பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட வேண்டும். வங்கியின், 25 சதவீத கிளைகள், கிராமப்புறங்களில் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகளை ரிசர்வ் வங்கி வகுத்துள்ளது.ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், மகிந்திரா அண்டு மகிந்திரா, ஆதித்ய பிர்லா, லார்சன் அண்டு டூப்ரோ, டாட்டா உள்ளிட்ட நிறுவனங்கள், வங்கித் துறையில் கால் பதிக்கும் என, தெரிகிறது.இந்திய வங்கித் துறையில் தனியார் நிறுவனங்களும் களம் இறங்க உள்ளதால், கடும் போட்டி உருவாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.



news thedipaar thanks

No comments:

Post a Comment