அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Saturday, 23 February 2013

ஜப்பான் மீது வீசப்பட்ட அணுகுண்டிற்கான புளுடோனியம் உற்பத்தி செய்யப்பட்ட அணு உலையில் கசிவு


[ சனிக்கிழமை, 23 பெப்ரவரி 2013, 
அமெரிக்கா தலைநகர் வாஷிங்டன் மாகாணத்தில் உள்ள ஹன்போர்ட் அணு உலை 1943ம் வருடம் நிறுவப்பட்டது. உலகிலேயே முதன் முறையாக, அணு ஆயுதம் தயாரிக்க தேவையான புளுடோனியத்தை உற்பத்தி செய்வதற்காக இது உருவாக்கப்பட்டது.
இரண்டாம் உலகப்போரின் போது முதல் முறையாக அமெரிக்கா பயன்படுத்திய அணு குண்டு இந்த கூடத்தில் உற்பத்தி செய்யப்பட்ட புளுடோனியதைக் கொண்டுதான் தயாரிக்கப்பட்டது.
அந்தக் குண்டுகள் ஜப்பான் நாட்டின் ஹிரோசிமா, நாகசாகியில் வீசப்பட்ததால் பெரும் சேதம் ஏற்பட்டது.
இதன் பின்னர் இந்த அணு உலை 1989-ம் வருடம் மூடப்பட்டது. இந்த கூடத்தில் கதிர் வீச்சை ஏற்படுத்தக் கூடிய பல மில்லியன் லிட்டர் அணுக கழிவுகள் 200 கலங்களில் நிரப்பப்பட்டு பூமிக்கடியில் புதைத்து பாதுகாக்கப்படுகிறது. இதில் ஆறு கலங்களில் இருக்கும் அணுக் கழிவுகள் கசிவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த வாரத்திலும் ஒரு கலத்திலிருந்து கசிவு ஏற்பட்டுள்ளது. வருடத்திற்கு 1136 லிட்டர் அணுக் கழிவு கசிவதாக இவர்கள் தெரிவித்துள்ளனர்.
கொலம்பியா ஆற்றிலிருந்து 8 கி.மீ தொலைவில் உள்ள இந்த கூடத்தில் ஏற்பட்டுள்ள இந்தக் கசிவால் மக்களுக்கு எந்த பதிப்பும் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

newsonews. thanks

No comments:

Post a Comment