அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Sunday, 24 March 2013

சீனாவின் உதவியுடன் பாகிஸ்தானில் அமைக்கப் படவுள்ள அணு உலை



பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தில் அமைந்துள்ள காஷ்மா எனும் இடத்தில் அந்நாட்டின் மூன்றாவது அணு உலையை சீனாவின் உதவியுடன் கட்டுவதற்குப் பாகிஸ்தான் அரசு இரகசியமாக சீனாவுடன் ஒப்பந்தம் கைச்சாத்திட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இதுவரை சர்வதேச அணுவாயுதக் குறைப்புத் திட்டத்துடன் ஒத்துக் கொண்டு வந்த சீன அரசு இந்த ஒப்பந்தம் மூலம் அதை மீறியுள்ளது எனவும் அமெரிக்க அதிபர் ஒபாமா தலைமையிலான நிர்வாகம் குற்றஞ்சாட்டியுள்ளது.
மேலும் இந்த ஒப்பந்தம் பாகிஸ்தான் அணுசக்தி மையத்தின் குழுவினர் பெப்ரவரியில் பீஜிங்கிற்கு விஜயம் செய்து அணுசக்தி பிரதிநிதிகளைச் சந்தித்த போது இரகசியமாகக் கைச்சாத்திடப் பட்டது என வாஷிங்டன் ஃப்ரீ பேகன் எனும் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. புதிதாக அமைக்கப் படவுள்ள அணு உலையில் 1000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யத் திட்டமிடப் பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. 2005 ஆம் ஆண்டு NSG எனப்படும் அணுவாயுத விற்பனைக் கட்டுப்பாட்டுச் சட்டத்தில் சீனா கைச்சாத்திட்ட போது ஏற்கனவே பாகிஸ்தானுக்கு வழங்கியிருந்த இரு அணு உலைகளைத் தவிர மேலதிக அணுசக்தி உற்பத்தி உதவிகளை அளிப்பதில்லை என சம்மதம் தெரிவித்து இருந்தமை இந்நிலையில் குறிப்பிடத்தக்கது.
மேலும் NSG இன் சட்ட திட்டங்களின் படி சர்வதேச அணுசக்தி நிறுவனத்தில் பங்கு பெறாத எந்த ஒரு நாட்டுக்கும் அணுவாயுத உபகரணங்களை சீனா விற்பதற்குத் தடையும் விதிக்கப் பட்டுள்ளது. இந்நிலையில் பாகிஸ்தானுடனான அணு ஒத்துழைப்பை சீனா விரிவாக்கி வருவது தொடர்பாக NSG அமைப்பு உறுப்பினர்கள் கலந்துரையாடி தீர்மானங்கள் எடுக்கவுள்ளனர்.


4tamilmedia. thanks

No comments:

Post a Comment