நீதிபதியை அடித்தவருக்கு 3 ஆண்டு சிறை: 16 ஆண்டுகளுக்கு பின்னர் தீர்ப்பு
[ வெள்ளிக்கிழமை, 01 மார்ச் 2013, 07:16.40 AM GMT +05:30 ]
பீகார்
மாநிலத்தில் ஒரு நீதிபதியை அடித்து நீதிமன்றத்தில் களேபரம் ஏற்படுத்திய 6
பொலிசாருக்கு ஆயிரம் ரூபாய் அபராதமும், தலா 3 ஆண்டு சிறைத்தண்டனையும் விதித்து
தீர்ப்பளிக்கப்பட்டது.
இந்த சம்பவம் பீகாரில் பகல்பூர் என்ற மாவட்ட அடிஷனல் செஷன்ஸ் நீதிமன்றத்தில்
1997ம் ஆண்டில் நடந்துள்ளது. இந்நிலையில் நீதிபதி எஸ்.என். சிங் தனது தீர்ப்பில் 3
ஆண்டு சிறையும், தலா ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்துள்ளார்.
இதில் ஒரு சிறப்பு என்னவெனில் தண்டனைக்குள்ளான ஒரு பொலிஸ் ‘கே. டி’- சவுத்ரி
என்பவர் ( மேற்கோள் காட்டியிருப்பது உண்மையிலே அவரது இன்ஷியல் தான் ) கோட்வாலி என்ற
பொலிஸ் ஸ்டேஷனுக்கு பொறுப்பு அதிகாரியாக இருந்து வருகிறாராம்.
இந்த தீர்ப்பில்(16 ஆண்டுகள் இடைவேளி) இவ்வளவு காலதாமதம் என்பது நீதித்துறை
சம்பந்தப்பட்ட வழக்கிற்கே இந்த நிலை என்றால் சாதாரண குடிமகன் ஒரு வழக்கின் தீர்ப்பை
எதிர்நோக்கி இருந்தால் அவன் இறுதிக்காலம் முடியும் வரை பலரும் தங்களுக்கு
வழங்கப்பட்ட தீர்ப்பின் நியாயத்தை அறியாமலே போய்சேர்ந்தவர்கள் பல லட்சம் பேர்
இருக்கும் என்றே உறுதியாக சொல்லமுடியும்.
No comments:
Post a Comment