அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Friday, 1 March 2013

சிங்கப்பூரில் இந்தியர்கள் வேலையிழக்கும் வாய்ப்பு

[ வெள்ளிக்கிழமை, 01 மார்ச் 2013, 
சிங்கப்பூர் அரசு கொண்டுவந்துள்ள புதிய கொள்கை காரணமாக இந்தியர்கள் உள்ளிட்ட அனுபவம் குறைவான 70,000 வெளிநாட்டு தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
இதுகுறித்து சிங்கப்பூர் பணியாளர் நலத் துறை அமைச்சகம் கூறுகையில், உள்நாட்டினருக்கு சம வாய்ப்பை வழங்கும் நோக்கத்திலும், "எஸ்-பாஸ்" உரிமத்தின் அடிப்படையில் திறமையான வெளிநாட்டினரை பணியில் அமர்த்த வேண்டும் என்ற நோக்கத்திலும் அதிக கட்டுப்பாடுகளுடன் கூடிய புதிய கொள்கை கொண்டுவரப்பட்டுள்ளது'' என கூறப்பட்டுள்ளது.
மேலாளர் நிலையில் பணிபுரியும் வெளிநாட்டினருக்கு எஸ்-பாஸ் உரிமம் வழங்கப்படுகிறது.
இந்த உரிமம் அவ்வப்போது புதுப்பிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு இறுதி நிலவரப்படி இந்த உரிமத்தின் கீழ் 1.42 லட்சம் பேர் பணியாற்றினர்.
இவர்களின் உரிமம் காலாவதி ஆக உள்ள நிலையில், புதிய கொள்கையின்படி, அனுபவம் குறைவான 70,000 பேரின் உரிமம் புதுப்பிக்கப்பட மாட்டாது என எனத் தெரிகிறது.
புதிய கொள்கையின்படி வரும் யூலை மாதம் முதல் அனுபவமுள்ள, மேலாளர் நிலையில் உள்ள வெளிநாட்டு ஊழியர்களை மட்டும் தக்க வைத்துக் கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
அதாவது மாத ஊதியமாக 2,200 சிங்கப்பூர் டொலருக்கு(ரூ.97,500) மேல் சம்பளம் பெறுபவர்கள் மட்டுமே தொடர்ந்து அங்கேயே பணிபுரிய முடியும். மற்றவர்களின் நிலை என்ன என்பது கேள்விக்குறியாகி உள்ளது

.newindianews thanks

No comments:

Post a Comment