அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Saturday, 2 March 2013

கொலை - கடற்கொள்ளை - கடத்தல்: 4 பேருக்கு சீனாவில் தூக்குத்தண்டனை!



on 02 March 2013.
மியான்மர் நாட்டைச் சேர்ந்த பிரபல போதைப் பொருள் கடத்தல் தலைவன் நவ் கம், தாய்லாந்தை சேர்ந்த போராளிகளின் துணையுடன் கடந்த 2011 ஆம் ஆண்டு, சீனாவுக்கு உட்பட்ட மேகாங் நதி பகுதியில் 2 சீன சரக்கு கப்பல்களை தாக்கி அதில் பணியாற்றிய 13 பேரை கொன்று கப்பலில் இருந்த சரக்குகளை கொள்ளையடிது...

அந்தக் கப்பலையும் கடத்திச் சென்று மியான்மர், தாய்லாந்து ஆகிய நாடுகளில் தலைமறைவாக பதுங்கி வாழ்ந்து வந்தான். அந்த நாடுகளை சேர்ந்த போலீசாரின் துணையுடன் சீன பொலீஸார் 8 பேரை கைது செய்து சீன நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். விசாரணை முடிவில் குற்றம் சாட்டப்பட்ட Naw Kham, Hsang Kham (தாய்லாந்து), Yi Lai (நாடற்றவன்), Zha Xika (லாவோஸ்) ஆகியோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

 

கொல்லப்பட்ட கப்பல் ஊழியர்களின் குடும்பத்திற்கு 9 1/2 லட்சம் அமெரிக்க டாலர்களை இழப்பீடாக வழங்க தயாராக இருப்பதாகவும் மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும் எனவும் குற்றவாளிகள் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு செய்யப்பட்டது. இவர்களின் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்த சுப்ரீம் கோர்ட், மரண தண்டனையை உறுதிசெய்து கடந்த நவம்பர் மாதம் தீர்ப்பளித்தது.


இந்த தீர்ப்பையடுத்து, குற்றவாளிகள் 4 பேருக்கும் விஷஊசி போட்டு நேற்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

News : Source

eutamilar thanks

No comments:

Post a Comment