
புதுடெல்லி:தலைநகர் டெல்லியில் மாநகராட்சித்
தொடக்கப் பள்ளி வளாகத்தில் 7 வயது சிறுமி பாலியல் பலாத்காரத்துக்கு
ஆளாக்கப்பட்டார். வடமேற்கு டெல்லியில் உள்ள மங்கோல்புரியில் வியாழக்கிழமை
இச்சம்பவம் நிகழ்ந்தது.
வடக்கு டெல்லி மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதி
மங்கோல்புரி. இங்குள்ள எல்-பிளாக்கில் மாநகராட்சித் தொடக்கப் பள்ளி இயங்கி
வருகிறது. இந்தப் பள்ளியில் அப்பகுதியைச் சேர்ந்த 7 வயது சிறுமி இரண்டாம் வகுப்பு
படித்து வருகிறார். சம்பவத்தன்று, இக்குழந்தையை பிற்பகலில் பள்ளியில்
இருந்து பெற்றோர் வீட்டுக்கு அழைத்துச் சென்றனர். பின்னர், குழந்தை
பாலியல் பலாத்காரத்திற்கு ஆனானதாக மங்கோல்புரி போலீஸாரிடம் வெள்ளிக்கிழமை
காலை பெற்றோர் புகார் அளித்தனர். இதையடுத்து, அந்தச் சிறுமி சஞ்சய்
காந்தி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவர் பாலியல் பலாத்காரத்திற்கு
ஆளாக்கப்பட்டிருந்தது மருத்துவப் பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டது.
இந்தச் சம்பவத்தைக் கேள்விப்பட்ட அப்பகுதி மக்கள்
சம்பந்தப்பட்ட மருத்துவமனை அருகே குவிந்தனர். இதனால் அப்பகுதியில் பதற்றம்
ஏற்பட்டது. போலீஸார் குவிக்கப்பட்டனர். இதனிடையே, குற்றவாளிகளைக் கைது
செய்வதில் போலீஸார் மெத்தனம் காட்டுவதாகக் கூறி பொதுமக்கள் வன்முறையில் ஈடுபட்டனர்.
வாகனங்கள் மீது சிலர் கல்வீச்சில் ஈடுபட்டனர்.
இது குறித்து போலீஸார் அதிகாரி ஒருவர் கூறுகையில்,
“பள்ளி வளாகத்தில் சிறுமி பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாக்கப்பட்டது குறித்து
வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக விசாரித்து வருகிறோம்” என்றார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக இரு பள்ளி ஆசிரியர்கள், காவலாளி உள்பட 3 பேரிடம் விசாரணை
நடைபெற்று வருகிறது என்று போலீஸார் தெரிவித்தனர்.
“இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை முடுக்கி
விடப்பட்டுள்ளது. சம்பவம் நடந்த பகுதியில் நேரில் விசாரணை நடத்த போலீஸ்
அதிகாரி அனுப்பப்பட்டுள்ளார்” என்று கூடுதல் ஆணையர் தெரிவித்தார்.
.thoothuonline thanks
No comments:
Post a Comment