அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Sunday 31 March 2013

பரமக்குடி அருகே இன்று காலை அரசு பஸ் தீப்பிடித்து எரிந்தது: 40 பயணிகள் உயிர் தப்பினர்


பரமக்குடி, மார்ச் 31-

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இருந்து இன்று காலை ஈரோட்டுக்கு அரசு பஸ் ஒன்று சென்றது. பஸ்சில் 40 பயணிகள் இருந்தனர். ராமேசுவரம்-சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்காக கமுதகுடி ரெயில்வே கேட் பூட்டப்பட்டு இருந்தது. கமுதகுடி ரெயில்வே கேட் அருகே அரசு பஸ் வந்தபோது திடீரென்று பிரேக் பிடிக்காமல் ரெயில்வே கேட் மீது டமார் என்று மோதியது.

ரெயில்வே கேட் மீது அரசு பஸ் மோதியதால் முன் பகுதி பலத்த சேதம் அடைந்தது. கண்ணாடிகள் உடைந்து நொறுங்கியது. மேலும் வயர்கள் ஒன்றுடன் ஒன்று உரசி முன் பகுதியில் தீப்பிடிக்க தொடங்கியது. இதை பார்த்ததும் உள்ளே இருந்த பயணிகள் அலறி அடித்துக்கொண்டு கீழே இறங்கி உயிர் தப்பினர். அதற்குள் பஸ்சின் முன் பகுதி முழுவதும் தீப்பிடித்து எரிந்தது.

இதுகுறித்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே தீயைணப்பு வீரர்கள் விரைந்து சென்று பஸ்சில் பிடித்த தீயை அணைத்தனர். இதற்கிடையில் ரெயில்வே கேட்டில் பஸ் மோதி தீ பிடித்த தகவல் ரெயில்வே அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது.

உடனே ராமேசுவரத்தில் இருந்து சென்னை சென்ற எக்ஸ்பிரஸ் ரெயில் சூடியூர் ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. பின்னர் நிலைமை சரியானதும் 40 நிமிடம் தாமதமாக ரெயில் புறப்பட்டது.

சம்பவ இடத்திற்கு போக்குவரத்து கழக உதவி பொறியாளர் ராஜ்குமார் மற்றும் போலீசார்கள் விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள். 

maalaimalar thanks

No comments:

Post a Comment