- Sunday, 03 March 2013 11:39

பங்களாதேஷில் இஸ்லாமிய தலைவர் ஒருவருக்கு விதிக்கப்பட்ட
மரணதண்டனையை எதிர்த்து நடைபெற்ற வன்முறைகளில் 50க்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.
1971 ம் ஆண்டு சுதந்திர போராட்டத்தின் போது, கொலை, பாலியல் பலாதகரம், சித்திரவதை ஆகியவற்றுடன் தொடர்பு பட்டிருந்ததாக ஜமாத்-இ-இஸ்லாமி கட்சியின் தலைவர் டெல்வார் ஹுசைன் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு மரணதண்டனை விதிக்கப்பட்டது.
எனினும், இது அரசியல் லாபங்களுக்காக திரிவு படுத்தப்பட்டு அவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டிருப்பதாக குற்றம் சுமத்திய, ஜமாத்-இ-இஸ்லாமிய அமைப்பு நாடு முழுவதும் ஆர்ப்பாட்ட பேரணியில் களமிறங்கியது. அதன் ஆதரவாளர்கள், பங்களாதேஷின் போக்ரா மாவட்ட காவல் நிலையத்தை தாக்கினர். அதே போன்று போக்ராவில் பல்வேறு பகுதிகளில் காவல்துறையினருக்கும், ஆர்ப்பாட்ட காரர்களுக்கும் இடையில் இடம்பெற்ற மோதல்களில் 50க்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.
1971ம் ஆண்டு சுதந்திர போராட்டங்களின் போது பாகிஸ்தானிய துருப்புக்களுடன் இணைந்து கொலை, பாலியல் பலாத்காரம் ஆகிய குற்றங்களில் ஈடுபட்டதாக 9 பேர் மீது பங்களாதேஷ் அரசு தண்டனை விதித்துள்ளது. அவர்களில் இருவர் எதிர்க்கட்சிகளை சார்ந்தவர்கள் என்பதால், எதிர்க்கட்சியினரும் கலவரங்களில் இறங்கியுள்ளனர்.
கிழக்கு பாகிஸ்தானாக இருந்த பங்களாதேஷ், இந்தியாவின் உதவியுடன், பாகிஸ்தானிய துருப்புக்களுடன் போரிட்டு 1971ம் ஆண்டு தனிநாடாக சுதந்திரமடைந்திருந்தது.
எனினும் இந்தச் சுதந்திர போரில், 3 மில்லியன் மக்கள் உயிரிழந்ததாகவும், 200,000 பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதாகவும், பல மில்லியன் மக்கள் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்ததாகவும் பங்களாதேஷ் அரசு தெரிவித்துள்ளது.
இந்திய குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி, மூன்று நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பங்களாதேஷுக்கு சென்றுள்ள வேளை பங்களாதேஷில் கலவரங்கள் தொடர்கின்றன.
4tamilmedia thanks
No comments:
Post a Comment