
புதுடெல்லி:பாராளுமன்ற தாக்குதல் வழக்கில் குற்றம்
சாட்டப்பட்ட அப்ஸல் குருவை தூக்கிலிட்டது தொடர்பாக எழுந்துள்ள முக்கியத்துவம்
வாய்ந்த கேள்விகளை தவிர்க்கவே மத்திய அரசே திட்டமிட்டு நிகழ்த்தியதுதான் ஹைதராபாத்
இரட்டைக்குண்டுவெடிப்பு என்று சிவில் உரிமை அமைப்பான ரிஹாய் மஞ்ச் குற்றம்
சாட்டியுள்ளது.
தீவிரவாதிகள் என்று பொய்க் குற்றம் சாட்டி சிறையில்
அடைக்கப்படும் அப்பாவி முஸ்லிம் இளைஞர்களின் விடுதலைக்காக பாடுபடும் அமைப்புதான்
ரிஹாய் மஞ்ச். தேசிய ஊடகங்கள் வலதுசாரிகளின் வளர்ப்பு மிருகங்களைப் போல
செயல்படுவதாக அவ்வமைப்பு குற்றம் சாட்டுகிறது.
ரிஹாய் மஞ்சின் பொதுச் செயலாளரும் முன்னாள் போலீஸ்
ஐ.ஜியுமான எஸ்.ஆர்.தரபுரி கூறியதாவது: “முஸ்லிம் இளைஞர்களை கைது செய்து
ஹிந்துத்துவா சக்திகளின் ஆதரவைபெறுவதற்கான அரசியல் நாடகத்தை அரசு நடத்துகிறது.
மத்திய உள்துறை அமைச்சர் சுசில்குமார் ஷிண்டே ஹிந்துத்துவா தீவிரவாதிகளின் புதிய
‘சர்’ ஆவார். அஜ்மல் கஸாபையும், அப்ஸல் குருவையும் தூக்கிலிட்டதற்கு பழிவாங்கவே
தீவிரவாதிகள் குண்டுவெடிப்பை நிகழ்த்தினார்கள் என்று ஷிண்டே கூறியது, பா.ஜ.கவை விட
பெரிய ஹிந்துத்துவா வாதியாக மாறுவதற்கான முயற்சியாகும். கூடவே அப்ஸல் குருவை
தூக்கிலிட்டது தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளை சமாளிக்கலாம்.
ஹிந்துத்துவா தீவிரவாதிகள் குறித்து ஜெய்ப்பூரில்
கூறிய கருத்துக்களை வாபஸ் பெற்றதும், பா.ஜ.க தலைவர்களுடன் சந்திப்பை
நிகழ்த்தியதும், ஹைதராபாத் குண்டுவெடிப்பு ஷிண்டேவின் கீழ் இயங்கும் உளவுத்துறை
ஏஜன்சிகள்தாம் நிகழ்த்தியுள்ளன என்பதற்கான தெளிவான ஆதாரமாகும். இதன் மூலம் பல்வேறு
குண்டுவெடிப்புகளில் சிக்கிய ஹிந்துத்துவாதீவிரவாதிகளை பாதுகாக்க முடியும்.
இதற்காகவே தீவிரவாதத்திற்கு எதிராக ஹிந்துத்துவா சக்திகள் ஹைதராபாத்தில் முழு
அடைப்பை நடத்தினர்.” இவ்வாறு தரபுரி கூறினார்.
ரிஹாய் மஞ்சின் தலைவர் வழக்கறிஞர் முஹம்மது சுஹைப்
கூறியது: இந்தியன் முஜாஹிதீன் மத்திய உள்துறை அமைச்சகத்தின் உருவாக்கமாகும்.
அரசுகள் அரசியல் நெருக்கடியை சந்திக்கும்போது இந்தியன் முஜாஹிதீனை உபயோகித்து
தப்பிக்க முயலுகின்றன. ஹைதராபாத்தில் குண்டுவெடிப்பு நிகழ்ந்த உடனேயே நான்கு
இந்தியன் முஜாஹிதீன் உறுப்பினர்கள் என்று கூறப்படுவோரின் வாக்குமூலங்கள்
ஊடகங்களுக்கு எவ்வாறு கிடைத்தது? இது விசாரணையை திசை திருப்புவதற்கான முயற்சியா?
ஹைதராபாத் உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஹிந்துத்துவா தீவிரவாதிகள்
குண்டுவெடிப்பை நிகழ்த்தியுள்ள சூழலில் ஏன் அவர்களின் பங்கு குறித்து விசாரணை
நடத்தப்படவில்லை? இது சங்க்பரிவார் கொடுத்த அழுத்தமா? அல்லது தீவிரவாதிகளெல்லாம்
முஸ்லிம்கள் என்ற சங்க்பரிவாரின் கருத்தை தான் உள்துறை அமைச்சரும் பரப்புரைச்
செய்கின்றாரா? குண்டுவெடிப்பை நிகழ்த்தியபாணி இந்தியன் முஜாஹிதீனுடையது என்று
கூறும் வேளையில் ஹிந்துத்துவா தீவிரவாதிகளும் இதே பாணியில் நடத்திய
குண்டுவெடிப்புகளை ஏன் காணாதபோல் நடிக்கவேண்டும்? மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு
வழக்கில் நீதிமன்றம் குற்றமற்றவர்கள் என்று கூறி விடுவித்த முஸ்லிம் இளைஞர்களை
மீண்டும் வேட்டையாடுவது ஏன்? குண்டுவெடிப்பு நிகழ்ந்த இடத்தில் சி.சி.டி.வி
கேமராக்கள் இயங்கவில்லை என்று கூறும்பொழுது தாடி வைத்த நபர்தாம் குண்டுவைத்தார்
என்று எவ்வாறு கூறமுடிகிறது? உள்ளிட்ட ஏராளமான கேள்விகளுக்கு அரசு
பதிலளிக்கவேண்டும் என்று அவர் கூறினார்.
.thoothuonline thanksa
No comments:
Post a Comment