9 வயது மாணவனை பாலியல் பலாத்காரம் செய்ததாக 54 வயது ஆசிரியை மீதான வழக்கில் பரபரப்பு தீர்ப்பு.
26 March 2013
9 வயது பள்ளி
மாணவனுடன் பாலியல் உறவு புரிந்ததாக குற்றம் சுமத்தப்பட்ட 54 வயது இசை ஆசிரியை மீது
தொடுக்கப்பட்ட
வழக்கில், ஆசிரியை குற்றமற்றவர் என டொரண்டோ நீதிமன்றம் அதிரடி
தீர்ப்பு வழங்கியது.
டொரண்டோவில் உள்ள
Toronto Catholic school board என்ற பள்ளியில் இசை ஆசிரியையாக பணிபுரிந்த Sylvia
Zoleta என்பவர் தன்னிடம் கல்வி பயிலும் ஐந்தாவது கிரேடு மாணவரிடம் பாலியல் உறவு
கொண்டதாக கடந்த 2005 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் குற்றம் சுமத்தப்பட்டார். இதனால்
இவர் பள்ளியில் இருந்து சஸ்பெண்டு செய்யப்பட்டதோடு, இவர் மீது வழக்கு
தொடுக்கப்பட்டது.
ஏழு ஆண்டுகளாக
நடந்து வந்த இந்த வழக்கின் தீர்ப்பு நேற்று அதிரடியாக கூறப்பட்டது. இதில் இசை
ஆசிரியை மீது சுமத்தப்பட்ட பாலியல் குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் பொய்யானவை என
நிரூபனம் ஆனதால் அவர் விடுதலை செய்யப்படுவதாகவும், அவருக்கு மீண்டும் அதே பள்ளியில்
பணிபுரிய வாய்ப்பு கொடுக்குமாறும் நீதிபதி தன்னுடைய தீர்ப்பில் தெரிவித்தார். இசை
ஆசிரியையின் மகளிடம் தவறாக நடந்து கொண்ட 9 மாணவன், தன்னுடைய தவறை மறைப்பதற்காக தன்
மீது பாலியல் குற்றம் சுமத்தப்பட்டது என Sylvia Zoleta தரப்பில் வாதிடப்பட்டது
என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment