அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Monday, 25 March 2013

மத்திய ஆபிரிக்காவில் பிரான்ஸ் துருப்புக்களால் இரு இந்தியர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்



மத்திய ஆபிரிக்காவில் இரு இந்தியர்கள் கொல்லப்பட்டமைக்கு பிரான்ஸ் அரசு தனது பகிரங்க வருத்தத்தை தெரிவித்துள்ளது.
கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் மத்திய ஆபிரிக்க குடியரசு நாட்டில், பெங்குய் விமான நிலையத்தில் நடைபெற்ற தாக்குதலின் போது இரு இந்தியர்கள் உள்ளிட்ட 6 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.


அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டமைக்கு தனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்து கொள்வதாக பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு பிரான்ஸ் அதிபர் பிரன்ஸுவாஸ் ஹோலந்து கடிதம் எழுதியுள்ளார்.

குறித்த விமான நிலையம் முழுவதும் பிரான்ஸ் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருக்கும் போது, பிரான்ஸ் படையினராலேயே இரு இந்தியர்கள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. விமானநிலையத்தை நோக்கி மூன்று வாகனங்கள் வேகமாக வந்து கொண்டிருந்ததாகவும் எச்சரிக்கையை மீறி அருகில் வந்ததால் சுடத்தொடங்கியதாகவும் பிரான்ஸ் துருப்புக்கள் தெரிவிக்கின்றன. இந்திய மற்றும் சாந்தியன் பொதுமக்களை பாதுகாப்பாக நகர்த்தும் நோக்கிலேயே இந்த வாகங்கள் வேகமாக சென்று கொண்டிருந்தது பின்னர் தெரியவந்துள்ளது.

இதையடுத்து மத்திய ஆபிரிக்க குடியரசில் உள்ள 100க்கு மேற்பட்ட இந்தியர்களை உடனடியாக பத்திரமாக நாட்டுக்கு  மீள எடுத்துக்கொள்ளும் முயற்சியில் இந்திய அரசு களமிறங்கியுள்ளது.

பிரிக்ஸ் மாநாட்டில் பங்குபெறும் முகமாக நான்கு நாள் விஜயமாக பிரதமர் மன்மோகன் சிங் தென் ஆபிரிக்கா சென்றுள்ள நிலையிலேயே இச்சம்பவம் நடந்துள்ளது.

4tamilmedia thanks

No comments:

Post a Comment