அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Monday, 25 March 2013

இலங்கை தூதரகத்தை சென்னையிலிருந்து உடனே அகற்ற காலக்கெடு - மூடாவிட்டால் பாரிய விளைவு மாணவர்கள்!


26  March  2013   
www.thedipaar.com
இலங்கைக்கு எதிரான மாணவர் போராட்டங்கள் தமிழகத்தில் வலுத்துள்ளது. இந்த போராட்டங்கள் தமிழக அரசியலிலும் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், சென்னையிலுள்ள இலங்கை துணை தூதரகத்தை மூடாவிட்டால் தூதரகத்தை இழுத்து மூடும் போராட்டம் நடத்தப் போவதாக மாணவர்கள் கூறியுள்ளனர்.

ஏப்ரல் 1ம் தேதிக்குள் இலங்கை தூதரகத்தை மூட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதற்காக திருச்சியில் கல்லூரி மாணவர்கள் இணைந்து, அனைத்து கல்லூரி மாணவர்கள் கூட்டமைப்பை ஏற்படுத்தியுள்ளனர்.
இதன் மூலம் காந்தி வழியில் மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தப் போவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் தங்களது வாக்காளர்கள் அட்டையை குடும்பத்துடன் வட்டாசியர் அலுவலகத்தில் ஒப்படைக்க இருப்பதாக மாணவர்கள் கூறியுள்ளனர்.
இந்நிலையில் இலங்கைக்கு இந்தியா வர்த்தக ரீதியில் எந்தவித உதவியும் செய்யக் கூடாது என வலியுறுத்தி தமிழகத்திலுள்ள பல்வேறு தரப்பு மாணவர்கள் உண்ணாவிரதம் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
nk


thedipaar. thanks

No comments:

Post a Comment