
March 26, 2013 03:30 pm
சவுதி அரேபியாவின் தொலைத் தொடர்புத் துறையின்
சட்டப்பிரிவு,இணையதளச் செய்தி சேவைகளான ஸ்கைப், வைபர், வாட்ச்அப் போன்ற வலைத்தளங்களை கண்காணிப்பதற்கு மறுப்பு
தெரிவித்தால்,
அவை தடை செய்யப்படும் என்று அறிக்கை வெளியிட்டுள்ளது.
ஆனால்
இதற்கான காரணத்தை அரசு வெளியிடவில்லை.
இந்த
நிறுவனங்களுக்கு,
சவூதி அரசு ஒரு வாரம், கால
அவகாசம் கொடுத்துள்ளது. ஆனால் சவூதி மக்களோ இந்தத் தலையீட்டால், தங்களின் தகவல் தொடர்பு தடைப்படும் என்று
கருதுகின்றனர்.
இதுதொடர்பாக சவூதி சைட் என்ற வலைப்பக்கத்தினை நடத்தி வரும்
அஹமத் ஓமரான் கூறுகையில்,
“தொலைத்தொடர்புத் துறை அரசின் உத்தரவுக்கு அடிபணியலாம்.
ஏனெனில், இது
மக்களுக்குத் தொல்லையாக இருந்தாலும், இந்தக்
கம்பெனிகளின் விளம்பரங்களின் மூலம் கிடைக்கும் அதிக வருமானம் ஒரு காரணமாக
இருக்கக்கூடும்”
என்கிறார்.
தொலைத்தொடர்புத் துறையே இது போன்ற செயலில்
ஈடுபட்டிருக்கக்கூடும் என்று பத்திரிகைகளில் செய்தி வெளியாகி உள்ளன.
/thamilan. thanks
No comments:
Post a Comment