
March 26,
2013 02:31 pm
இலங்கையில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள கொமன்வெல்த்
தலைவர்களின் உச்சி மாநாட்டை, பிரித்தானிய மகாராணி 2வது எலிசபெத் புறக்கணிக்க
வாய்ப்புள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
எதிர்வரும் நவம்பர் மாதம் 15-ம் திகதி தொடக்கம் 17-ம் திகதி
வரை இலங்கையில் நடைபெறவுள்ள கொமன்வெல்த் உச்சி மாநாட்டில், பிரித்தானிய மகாராணி பங்கேற்கமாட்டார் என்பது பெரும்பாலும்
உறுதியாகி விட்டதாக லண்டனில் உள்ள கொமன்வெல்த் செயலகத்தின் பெயர் வெளியிடாத மூத்த
அதிகாரியை மேற்கோள்காட்டி இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
அத்துடன், இலங்கையின் மனிதஉரிமைகள் நிலைமைக்கு எதிர்ப்புத்
தெரிவிக்கும் வகையில் பல நாடுகளின் அரச தலைவர்களும் கொழும்பு மாநாட்டில் இருந்து
ஒதுங்கி கொள்ள வாய்ப்புள்ளதாகவும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
கொமன்வெல்த் உச்சி மாநாட்டை புறக்கணிப்பதோ அல்லது அதனை
இடமாற்றம் செய்வதோ நியாயமற்றது என்று உறுப்புநாடுகளை இலங்கை அமைதிப்படுத்தும்
முயற்சிகள் எதையும் மேற்கொள்ளவில்லை என்றும் கொமன்வெல்த் செயலக மூத்த அதிகாரி
குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை. கொமன்வெல்த் தலைவர்களின் உச்சி
மாநாட்டை, மொரிசியசுக்கு மாற்றும் முயற்சிகள் நடந்து கொண்டிருப்பதும்
குறிப்பிடத்தக்கது.
thamilan thanks
No comments:
Post a Comment