சீனாவிற்கு எதிராக நான்கு குழந்தைகளின் தாய் தீக்குளிப்பு
[ செவ்வாய்க்கிழமை, 26 மார்ச் 2013,
சீனாவிற்கு எதிர்ப்பு
தெரிவிக்கும் விதத்தில் நான்கு பிள்ளைகளின் திபெத்திய தாயொருவர் தீக்குளித்து
உயிரிழந்துள்ளார்.
திபெத் நாட்டின் மீது சீனாவின் அரசியல் மற்றும் மத ஆதிக்கத்தை எதிர்த்து
பல்லாயிரக்கணக்கான திபெத்தியர்கள் தலாய் லாமா தலைமையில் போராட்டம் நடத்தி
வருகிறார்கள்.
இந்த கோரிக்கையை வலியுறுத்தி உலகின் பல நாடுகளில் வாழும் திபெத்தியர்கள்
தீக்குளித்தும் உயிர் தியாகம் செய்கின்றனர்.
இந்த தற்கொலைகளுக்கு தலாய் லாமாவின் தூண்டுதல்தான் காரணம் என சீனா குற்றம்
சாட்டி வருகிறநிலையில் திபெத் நாட்டின் தன்னாட்சி உரிமை பெற்ற சிச்சுவான்
மாகாணத்தில் ஒரு திபெத்திய பெண், தனி திபெத் கோரிக்கையை வலியுறுத்தி தீக்குளித்து
உயிரிழந்தார்.
அபா மாவட்டத்தில் உள்ள புத்த மடாலயத்தின் முன்னர் தீக்குளித்த அவரின் பெயர்
கல்கிய் என்றும் 30 வயது மிக்க அவர் 4 குழந்தைகளின் தாய் எனவும் தெரிய
வந்துள்ளது.
No comments:
Post a Comment