Tuesday, 26 March 2013 01:09

சென்னையைத் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் தற்போது, 10 முதல் 12 மணி நேரம் வரை மின்தடை நிலவுகிறது. இந்த பிரச்சனைக்கு ஒருவாரத்துக்குள் தீர்வு எட்டப்படும் என்று, மின்வாரியம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் காற்றாலைகள் முடங்கியதால் மின்தடை நேரம் அதிகரித்துள்ளது. அதாவது பருவமழையின்மை காரணமாக மின்தட்டுப்பாடு நிலவி வந்த நிலையில், காற்று பலமாக வீசி வந்ததால், மின்சாரம் சற்று கைகொடுத்து வந்தது. தற்போது காற்றின் வேகம் குறைந்துள்ளதால் காற்றாலைகளும், கைவிட்டுவிட்டது. தற்போது கோடைக்காலம் என்பதால் மின்சாதனங்களை பயன்படுத்துவது அதிகரித்துள்ளது.
ஆனால், அதற்கேற்ப மின் உறபத்தி இல்லாததால் மின்தடை நேரம் அதிகரித்து விட்டது. காற்றாலை மின் உற்பத்தியும் கை கொடுக்காத நிலை. இதனால் வெவ்வேறு மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து மின்சாரம் பெறுவதற்கான வேலைகள் துரித கதியில் நடைபெற்று வருவதால், சுமார் 1000 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் ஒரு வாரத்தில் இந்த மின்சாரம் கிடைத்து விட்டால் மின்வெட்டு நேரம் பாதிக்கு மேல் குறையும் என மின்வாரிய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
4tamilmedia. thanks
No comments:
Post a Comment