அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Friday 29 March 2013

இலங்கையில் வானொலி சேவையை இடைநிறுத்தியது பிபிசி!


on 29 March 2013.

தனது சர்வதேச வானொலி சேவையின் இலங்கை ஒலிபரப்பை முழுமையாக நிறுத்தியுள்ளதாக பிபிசி ஊடகம் அறிவித்துள்ளது. அதன் தமிழ் பிரிவு ஒலிபரப்புக்களுக்கு இலங்கையில் தொடரும் பல்வேறு இடையூறுகள் மற்றும் தடங்கல்களை அடுத்து இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது.

இதையடுத்து பிபிசியின் தமிழ் மற்றும் ஆங்கில மொழி இரு ஒலிபரப்பு சேவைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன. 'இலங்கையில் இருக்கும் எமது தனித்துவமான வானொலி ரசிகர்களுக்கு எமது வருத்தத்தை தெரிவித்து கொள்கிறோம். அவர்கள் எம்மீது வைத்திருக்கும் நம்பிக்கையை சீர்குலைக்கும் வகையிலேயே இந்த இடையூறு முயறிகள் மேற்கொள்ளப்படுகின்றன' என பிபிசியின் சர்வதேச சேவை இயக்குனர் பீட்டர் ஹொரொக்ஸ் தெரிவித்துள்ளார்.


கடந்த மார்ச் 16, 17 மற்றும் 18ம் திகதிகளில் பிபிசி தமிழ் வானொலி அலைவரிசை முற்றாக ஸ்தம்பிதமடைந்திருந்ததாகவும் இதையடுத்து இலங்கை ஊடக திணைக்களத்திற்கு (SLBC) இது ஒரு அத்துமீறல் என எச்சரித்திருந்ததாகவும், எனினும் தொடர்ந்து மார்ச் 25ம் திகதியும் இதே போன்று இடையூறு ஏற்படுத்தப்பட்டதை அடுத்து தமது ஒலிபரப்பு சேவையை முற்றாக இடைநிறுத்த தீர்மானித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


பிபிசியின் ஒலிபரப்புக்கள் தொடர்பில் ஏதேனும் முறைப்பாடு இருந்திருந்தால், இலங்கை ஊடகத் திணைக்களம் தம்மிடம் நேரடியாக பேசியிருக்கலாம். அதைவிடுத்து ஒலிபரப்பு சேவைகளை குழப்புவது என்பது தமது வானொலி ரசிகர்களின் நம்பிக்கையையும் சீர்குலைக்க கூடியது என அவர் தெரிவித்துள்ளார். இலங்கையில் 2009ம் ஆண்டு இறுதி யுத்தம் மிக தீவிரமாக நடைபெற்றுக்கொண்டிருந்த போதும், இதே போன்று பிபிசியின் தமிழ் ஒலிபரப்பு சேவைக்கு தொடர்ந்த இடையூறு காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்தது.


பிபிசியின் வானொலி ஒலிபரப்பு தற்போது மீண்டும் இடைநிறுத்தப்பட்டுள்ள போதும், Short-Wave ஊடாகவும், பிபிசி இணையத்தளம் ஊடாகவும் தொடர்ந்து நிகழ்ச்சிகளை கேட்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது இலங்கை ஏற்கனவே ஊடகங்களுக்கு அச்சுறுத்தலான நாடு எனும் பட்டியலில் தொடர்ந்து முன்னிலை பெற்றுள்ள நிலையில் பிபிசியின் இந்த அதிரடி அறிவிப்பும் சர்வதேச கவனம் பெற்றுள்ளது

.eutamilar thanks

No comments:

Post a Comment