Thursday, 25 April 2013 18:40

இன்று வானில் தெரியும் சந்திரகிரகணம், 21ம் நூற்றாண்டின், மூன்று சந்திர கிரகணங்களில், மிக நீண்ட நேரம் தெரியும் சந்திர கிரகணம் ஆகும். இதை 27 நிமிடங்களுக்கு வெறுங் கண்ணால் பார்க்க முடியும்.
சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையே பூமி வருகிற போது பூமியின் நிழலால் சந்திரன் மறைந்து பின்னர் தெரிவது சந்திர கிரகணம். இந்த ஆண்டு மூன்று சந்திரகிரகணங்கள் மற்றும் இரு வளையம் போன்ற சந்திர கிரகணங்கள் என மொத்தம் 5 கிரகணங்கள் நிகழவுள்ளன. அதன் படி இன்று முதலாவது சந்திர கிரகணம், இன்று நள்ளிரவு இந்திய நேரம் 1 மணி 22 நிமிடங்கள் முதல், 1 மணி 53 நிமிடங்கள் வரை நிகழ்கிறது. 27 நிமிடங்கள் வரை நீடிக்கும் இச்சந்திர கிரகணத்தை அனைவரும் நேரடியாக கண்டு ரசிக்கலாம்.
எதிர்வரும் 2034 செப்டெம்பர் 28ம் திகதி, 26.7 நிமிடங்களும், 2082ம் ஆண்டில் 25.5 நிமிடங்களும் சந்திர கிரணங்கள் மிக குறைவான நேரத்தில் தெரியும் என அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்றைய சந்திர கிரகணத்தை உலகின் அதிக நாடுகளில் காணக்கூடியதாக உள்ளது. இந்தியா மட்டும் அல்லாது, ஆஸ்திரேலியா, ஆசியா, ஆபிரிக்கா, ஐரோப்பா என பல நாடுகளில் வெறுங்கண்ணால் நேரடியாகவும் இலகுவாகவும் இச்சந்திர கிரகணத்தை பார்க்க முடியும் என தெரிவிக்கப்படுகிறது.
இன்றைய தினம் இந்துக்கள் சித்திரா பௌர்ணமி எனும் விசேட தினமாக இதனை வழிபடுகிறார்கள்.
4tamilmedia thanks
No comments:
Post a Comment