அமெரிக்காவில் உரத்தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து: 70 பேர் பலி, 100 பேர் படுகாயம்(வீடியோ இணைப்பு)
[ வியாழக்கிழமை, 18 ஏப்ரல் 2013,
அமெரிக்காவின் டெக்சாஸ்
மாகாணத்தில் வாகோ நகருக்கு அருகிலுள்ள உரத்தொழிற்சாலையில் இன்று அதிகாலை ஏற்பட்ட
பயங்கர வெடிவிபத்தில் 70 பேர் பலியானதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இதில் ஏற்பட்ட தீ அருகில் இருந்த பல கட்டிடங்களுக்கும், வீடுகளுக்கும் மளமளவெனப்
பரவியுள்ளது. மேலும் இந்த கட்டிடங்களினுள் பலர் சிக்கி இருப்பதாகவும் தகவல்கள்
தெரிவிக்கின்றன.
தகவல் அறிந்ததும் அங்கு விரைந்து சென்ற தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்க
போராடி வருகின்றனர். இப்பணியில் 6 ஹெலிகொப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
இந்த விபத்தில் 70 பேர் பலியாகியுள்ளனர். 100க்கும் மேற்பட்டோர் படுகாயம்
அடைந்துள்ளனர். அவர்களை மீட்கும் பணியில் தீயணைப்பு வீரர்களும், பாதுகாப்பு
படையினரும் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளனர்.
இது தற்செயலாக நிகழ்ந்த விபத்தா அல்லது தீவிரவாத செயலா என்று விசாரணை
நடத்தப்பட்டு வருகின்றது. இந்த விபத்தில் தொழிற்சாலைக்கு அருகில் இருந்த
மருத்துவமனை ஒன்றும் பலத்த சேதமடைந்துள்ளது.
இதனால் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று
அஞ்சப்படுகின்றது.
No comments:
Post a Comment