அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Thursday, 18 April 2013

தற்கொலை செய்து கொண்ட கர்ப்பிணி தாயின் பாசமிகு பதிவுகள்

[ புதன்கிழமை, 17 ஏப்ரல் 2013,
பிரிட்டனிலுள்ள லோவஸ்ட்டாஃப்ட்(Lowestoft) நகர் காவல் துறையின் பல அடுக்கு மாடி கட்டிடத்திலிருந்து கீழே குதித்து தன்னுயிரை மாய்த்துக் கொண்ட இளம் தாய் முகப்புத்தகத்தில் தனது குழந்தைகளை குறித்து பதிவு செய்திருந்தார். அதில் பிள்ளைகளை நான் கைவிட மாட்டேன், அவர்களைப் பாதுகாப்பாகவும், மகிழ்ச்சியாகவும் வைத்திருப்பேன். அவர்கள் மீதான எனது அன்பையும் பாசத்தையும் விவரிக்க வார்த்தைகளே இல்லை போன்ற வாசகங்களை எழுதியிருந்தார்.
இவை தவிர இந்தத் தாய் கர்ப்பிணியாக இருந்துள்ளார். இவரது கர்ப்பத்தில் இருந்த குழந்தையை நுண்ணொலி(ultrasound scan) மூலம் பதிவு செய்து அதனையும் முகப்புத்தகத்தில் வெளியிட்டுள்ளார்.
இந்தப் பெண் இறப்பதற்கு முன்னர் குரோஸ்வெனோர்(Grosvenor) சாலையில் அங்கும் இங்குமாக நடந்து திரிந்த காட்சி கண்காணிப்பு கமெராவில் பதிவாகியுள்ளது.
பெல்விடெர் சாலையில் உள்ள அனாதைகள் இல்லமான ஃபைஃப் (Fyffe Centre)செண்டருக்குப் போய் தனது வீட்டுச் சாவிகளை ஒப்படைத்த பின்னர் தான் தற்கொலை செய்துள்ளார். தற்கொலைக்கான காரணம் குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இறந்து கிடந்த 3 குழந்தைகளின் பிரேதப் பரிசோதனை அறிக்கை இன்னும் வெளிவரவில்லை.

No comments:

Post a Comment