சிறிது நேரம் ஓய்வுக்குப்பின், வைகோ மீண்டும் நடைபயணத்தை தொடக்கி விட்டார். நேற்று இரவு உடுமலை அருகில் உள்ள தேவனூர்புதூரை அடைந்த வைகோ, அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் பேசினார். மதியம் தனக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவு குறித்து குறிப்பிட்டு பேசினார்.
பின்னர் கரட்டுமடத்தில் உள்ள தொண்டர் வீட்டில் நேற்றிரவு தங்கினார். அவரது நடைபயணம், இன்று உடுமலை பகுதியில் தொடர்கிறது.
வைகோவின் நடைப்பயணம் ஆரம்பிக்கப்பட்ட போது, திருப்போரூரில் இருந்து, சிறுதாவூர் வழியாக மாமல்லபுரம் சென்று கொண்டிருந்தபோது, அந்தப் பாதையில் சென்ற முதல்வர் ஜெயலலிதா, காரில் இருந்து இறங்கி, “உடல் நலத்தை பார்த்துக் கொள்ளுங்கள்” என தெரிவித்திருந்தார்.
தற்போது வைகோவுக்கு மயக்கம் ஏற்பட்ட நிலையிலும் அவர் நடைப் பயணத்தை தொடர்வது, ம.தி.மு.க. தொண்டர்களுக்கு கவலையையும், அதே நேரத்தில் பெருமையையும் ஏற்படுத்தியுள்ளது.
viruvirupu thanks
No comments:
Post a Comment