Thursday 18 April 2013
மாணவி போலீஸில் புகார் கொடுத்தபோது, இரண்டு பேர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்தனர் என்றும் மூன்றாவது நபர் வெளியில் நின்று கொண்டிருந்தார் என்றும் தெரிவித்துள்ளார். அதன்பின் மாணவியை தெற்கு டில்லியின் சரோஜனி நகரில் உள்ள சாலையில் தூக்கி வீசப்பட்டு அவர்கள் சென்று விட்டனர் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
தற்போது மாணவி மருத்துவ பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ளனர். அவர்கள் ஒருவரை கைது செய்துள்ளனர். மேலும், இரண்டு பேரை தேடி வருகின்றனர்.
டில்லியில், கடந்த வருடம் டிசம்பர் மாதம் நடந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இதனை அடுத்து பெண்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறைகளை தடுக்கும் விதமாக புதிய சட்டம் இயற்றப்பட்டது. மேலும், அரசியல் தலைவர்கள் அனைவரும் டில்லியில் போலீஸ் ரோந்து அதிகரிக்கப்படும் என்று கூறினர்.
இந்நிலையில் மீண்டும் அது போன்ற சம்பவம் நடைபெற்றுள்ளது மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. viruvirupu thanks
No comments:
Post a Comment