அலிகார், ஏப். 18-
உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோ அருகே உள்ள அலிகாரில் குப்பை தொட்டிப்பகுதியில் இன்று காலை ஆறு வயது சிறுமி இறந்த நிலையில் கிடந்தாள். இது அப்பகுதியில் காட்டுத்தீயாய் பரவ, பெரும் போராட்டத்தை கொண்டுவந்தது. இதனால் அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர்.
தனது 6 வயது மகள் கற்பழித்து கொல்லப்பட்டிருக்கிறாள் என்று கூறி நீதி கேட்டு பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, ஏ.கே. சிங் என்ற ஒரு போலீஸ் அதிகாரி நீதி கேட்ட அந்த தாயை ஈவு இரக்கமின்றி இழுத்து கீழே தள்ளி அடித்து விரட்டினார்.
மேலும் அந்த சிறுமியின் தந்தையையும் போலீசார் அடித்தனர். மிகவும் வெட்கப்பட வேண்டிய இந்த மோசமான இச்சம்பவத்தினை அந்த பகுதியின் ஒரு செய்தி நிறுவனத்தினர் பதிவு செய்தனர்.
பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்டோரை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். இந்த விவகாரம் குறித்து டி.ஐ.ஜி. அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று கூடுதல் டி.ஜி.பி. கேட்டுள்ளார்.

maalaimalar. thanks
No comments:
Post a Comment