மாணவர்களைச் சீரழிக்கும் புதிய பாலியல் சிந்தனைகள்: ஆசிரியர்கள் எச்சரிக்கை
மாணவர்களைச் சீரழிக்கும் புதிய பாலியல் சிந்தனைகள்: ஆசிரியர்கள்
எச்சரிக்கை
[ திங்கட்கிழமை, 01 ஏப்ரல் 2013,
பிரிட்டனிலுள்ள
லிவர்பூவில் நடைபெற்ற ஆசிரியர் மற்றும் விரிவுரையாளர்களுக்கான தேசிய கருத்தரங்கில்
மாணவர்கள் மத்தியில் மாறிவரும் பாலியல் செயல்பாடுகள் குறித்து பேசப்பட்டது.
இக்கருத்தரங்கில் மாணவிகள் குறித்து ஆசிரியர்கள் கூறுகையில், தங்கள் உடலை ஒரு
காமப்பொருளாகப் பிறருக்குப் படைத்துக் காட்ட இளம் மாணவிகள் விரும்புகின்றனர்.
மேலும் பாலுணர்வைத் தூண்டும் வகையில் உடை உடுத்துவதும், உடம்பை ஒல்லியாக
வைத்துக் கொள்ள விரும்புவதும், அவர்களின் உடல் ஆரோக்கியத்துக்கும் மன நலத்துக்கும்
ஆபத்து விளைவிப்பதாக உள்ளன என்று தெரிவித்துள்ளனர்.
தற்பொழுது மாணவர்கள் அதிகமாக பாலுறவுப் படங்களைப் பார்ப்பதும், பாலுறவு பற்றிய
சொற்களைப் பேசுவதும் இளம் மாணவர்களைப் போகப் போக உணர்ச்சியற்ற பிண்டங்கள்
ஆக்கிவிடும் என்றும் ஆசிரியர்கள் பெரிதும் கவலை தெரிவித்தனர்.
இச்சங்கத்தின் பொதுச்செயலர் கிறிஸ்டின் புளோவர்(Christine Blower) கூறுகையில்,
வயதுக்கேற்ற கல்வியை மட்டும் மாணவர்கள் பெறவேண்டும் என்றும் தங்களின் உடல் மற்றும்
உணர்வுகளுக்கு மாணவ மாணவியர் மதிப்பளிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment