பெட்ரோல் பங்க் மீது தற்கொலை படையினர் தாக்குதல்: பத்து பேர் பலி
[ திங்கட்கிழமை, 01 ஏப்ரல் 2013
ஈராக் தலைநகர் பாக்தாத்தின் மத்திய
பகுதியில், வெடிப்பொருட்களை ஏற்றி கொண்டு டேங்கர் லாரியில் வந்த தீவிரவாதிகள் ஒரு
பெட்ரோல் பங்கிற்கு அருகில் அந்த லாரியை வெடிக்க வைத்தனர்.
டேங்கர் லாரி வெடித்து சிதறியதில் பெட்ரோல் பங்க் பயங்கரமாக தீப்பற்றி எரிந்தது.
இதில் 2 கட்டிடங்கள் சேதமடைந்தன.
இந்த தற்கொலைப் படை தாக்குதலில் 10 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும்
30க்கும் மேற்பட்டவர்கள் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இறந்தவர்களில் 7 பேரும், காயமடைந்தவர்களில் பலரும் பொலிஸ்காரர்கள் என்று
தெரியவந்துள்ளது.
இது குறித்து பொலிசார் கூறுகையில், அங்குள்ள பெட்ரோல் பங்கிற்கு பெட்ரோல்
இறக்குவதற்காக அடிக்கடி டேங்கர் லாரிகள் வருவது வாடிக்கை என்பதால் யாருக்கும்
சந்தேகம் ஏற்படவில்லை என்று தெரிவித்துள்ளனர்.
இதுவரை இந்த தாக்குதல் குறித்து எந்த இயக்கமும் பொறுப்பேற்கவில்லை.
No comments:
Post a Comment