அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Monday 29 April 2013

மலேசியாவில் இந்திய அரசியல் தலைவருக்கு கைது வாரண்ட்


By dn, கோலாலம்பூர்

First Published : 29 April 2013 
இந்திய அரசியல் தலைவர் ஒருவருக்கு கைது வாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது மலேசிய நீதிமன்றம்.

மலேசியாவில் ஹிந்து உரிமைகள் போராட்ட அமைப்பு (ஹிந்த்ராஃப்) கட்சியின் தலைவராக இருப்பவர் பி.உதயகுமார். மலேசியாவில் வரும் மே 5-ஆம் தேதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் அவர் வேட்பாளராகப் போட்டியிடவுள்ளார். இந்நிலையில் அவர் மீது சுமத்தப்பட்ட தேசதுரோக வழக்கு ஒன்றில் நீதிமன்றத்தில் ஆஜராகாததால் அவருக்கு கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.ஹிந்த்ராஃப் கட்சி சார்பில் அரசுக்கு எதிராக கடந்த 2007-ஆம் ஆண்டு மாபெரும் பேரணி ஒன்றை நடத்தினார் உதயகுமார். அதில் அவரது கட்சி சார்பில் அரசுக்கு எதிராக  பல கருத்துகள் தெரிவிக்கப்பட்டன. உதயகுமாரின் சகோதரரும் கட்சியின் முக்கியத் தலைவருமான வேதமூர்த்தி பிரிவினையைத் தூண்டும் வகையில் பேசியதாக குற்றம் சாட்டப்பட்டதுஇது குறித்து உதயமூர்த்தி கூறியதாவது:
முதுகுத் தண்டுவடத்தில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக என் மீதான வழக்கில் ஏப்ரல் 2-ஆம் தேதி முதல் மே 17-ஆம் தேதி வரை நீதிமன்றத்தில் ஆஜராக இயலாது என முறையாக மருத்துவச் சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளது.ஆனால் அதையும் மீறி கைது வாரண்ட் பிறப்பக்கப்பட்டுள்ளதில் அரசியல் பின்னணி உள்ளது. வேதநாயகம் கட்சிப் பொறுப்பிலிருந்து முன்பே நீக்கப்பட்டுவிட்டார்.ஹிந்த்ராஃப் அமைப்பினர் தொடர்ந்து பிரசாரத்தில் ஈடுபடுவார்கள். நான் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டாலும் தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து பின்வாங்க மாட்டேன் என்றார்

dinamani thanks

No comments:

Post a Comment