அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Tuesday, 16 April 2013

அமெரிக்க மரதனில் நடந்த குண்டு வெடிப்பிற்கு பாகிஸ்தான் பொறுப்பு?

[ செவ்வாய்க்கிழமை, 16 ஏப்ரல் 2013, 
அமெரிக்காவின் பொஸ்டன் நகரில் நடைபெற்ற மரதன் போட்டியில் பார்வையாளர்கள் பகுதியிலிருந்து அடுத்தடுத்து இரண்டு குண்டுகள்  பயங்கரமாக வெடித்தன. இத்தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டதுடன் நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
இருப்பினும் கடந்த 2010ம் ஆண்டு மே 1ம் திகதி நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் கார் குண்டு தாக்குதலில் ஈடுபட்ட பாகிஸ்தான் தலிபான்கள் இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டது.
ஆனால், பாகிஸ்தானில் செயல்படும் தெரிக் இ தலிபான் இயக்கம் இதனை மறுத்துள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பின் செய்தி தொடர்பாளர் இஷானுல்லா இஷான் கூறுகையில், "அமெரிக்காவிலும், அதன் தோழமை நாடுகளிலும் தாக்குதல் நடத்த வேண்டும் என்று விரும்புகிறோம். ஆனால் இந்த தாக்குதலில் நாங்கள் ஈடுபடவில்லை. அதேசமயம் எங்கெல்லாம் தாக்குதல் நடத்த முடியுமோ அங்கு அவர்களை குறிவைப்போம்" என்று தெரிவித்துள்ளார்.
இந்த பொஸ்டன் வெடிகுண்டு தாக்குதல் சம்பவம் கடந்த செப்டம்பர் மாதம் நடந்த தாக்குதலை மீண்டும் நினைவுபடுத்தியுள்ளது. எனவே, நியூயார்க் முதல் லாஸ் ஏஞ்சல்ஸ் வரை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
newsonews thanks

No comments:

Post a Comment