
April 18,
2013 08:54 am
அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவுக்கு அனுப்பப்பட்ட கடிதமொன்றில்
ரிசின் என்னும் விஷப்பொருள் தடவி இருப்பதை அதிகாரிகள்
கண்டுபிடித்துள்ளனர்.
இதேபோல்
அமெரிக்காவின் குடியரசு கட்சியை சேர்ந்த ´செனட்´ உறுப்பினர் ரோஜர் விக்கருக்கு வந்த ஒரு மர்ம கடிதத்திலும்,
இவ்வாறு விஷம் தடவப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
டென்னீசி மாகாணத்தில் உள்ள மெம்பிஸ் நகரில் இருந்து இது
தபால் நிலையம் வழியாக அனுப்பப்பட்டிருந்தது.
ஆனால், அந்த
கடிதத்தை அனுப்பியவரின் முகவரி எதுவும் குறிப்பிடப்படவில்லை. கடிதத்தை பிரித்து
படிக்கும் போதும் கையால் நாவில் எச்சில் படுத்தும் போதும் விஷம் உடலில் பரவி
மரணத்தை ஏற்படுத்த இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.
அமெரிக்காவில் கடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் திகதி
தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல்களுக்கு பிறகு ‘ஆந்த்ராக்ஸ்’ விஷகிருமி பார்சல்கள் அனுப்பப்பட்டன.
அதன்
பின்னர் அமெரிக்க ஜனாதிபதி, துணை
ஜனாதிபதி, எம்.பி.-க்கள் ஆகியோருக்கு அனுப்பப்படும் கடிதங்கள் வெள்ளை
மாளிகையில் இருந்து சற்று தொலைவில் உள்ள ஓர் இடத்தில் அதிகாரிகள் கடுமையாக
சோதனையிடுகின்றனர்.
அதன்
பின்னரே கடிதங்கள் உரியவரிடம் ஒப்படைக்கப்படுகின்றன. சமீபத்தில் பாஸ்டன் நகரில்
நிகழ்ந்த குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு பிறகு பாதுகாப்பு ஏற்பாடுகள் இருமடங்கு
அதிகரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில், அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில்
அதிபயங்கர ´ரிசின்´ (ஆமணக்கு
செடியின் கழிவுகளில் தயாரிப்பது) என்னும் விஷப்பொருள் தடவி இருப்பதை அதிகாரிகள்
கண்டுபிடித்துள்ளனர்.
ஒபாமாவின் பெயருக்கு அனுப்பப்பட்ட அந்த கடிதத்தில்
´ரிசின்´ ரவைகள்
காணப்பட்டதாக அந்த கடிதத்தை சோதனையிட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.´
ரிசின் ரவைகள்
காற்றில் கலந்து சுவாசப் பைக்குள் சென்றால் அதிபயங்கர நோய்த் தாக்கத்தை ஏற்படுத்தக்
கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.
செனட்டர் ரோஜர் விக்கருக்கு அனுப்பப்பட்ட கடிதத்திற்கும்
ஒபாமாவுக்கு அனுப்பப்பட்ட கடிதத்திற்குள் நிறைய ஒற்றுமைகள் உள்ளன.
ஆனால், இந்த
இரு கடிதங்களையும் அனுப்பியுள்ளது ஒரே நபராகத்தான் இருக்க முடியும் என பொலிசார்
கருதுகின்றனர்.
2
கடிதங்களுமே டென்னசீ மாநிலத்தில் உள்ள மெம்பிஸ் நகரில் இருந்து 16ம் திகதி
அனுப்பப்பட்டுள்ளன. அவை ஒரே மொழியில் எழுதப்பட்டு, ஒரே
நபரால் கையொப்பமிடப்பட்டுள்ளன.
இந்த
இரண்டு கடிதங்களையும் அனுப்பிய நபரை பிடிக்க அமெரிக்க உளவுத் துறை பொலிசார்
தீவிரமாக ஆலோசித்து வருகின்றனர்.
thamilan thanks
No comments:
Post a Comment