அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Wednesday, 17 April 2013

அமெரிக்காவில் உரத் தொழிற்சாலையில் வெடி விபத்து : தீவிரவாத செயலா?


அமெரிக்காவில் உரத் தொழிற்சாலையில் வெடி விபத்து : தீவிரவாத செயலா??
April 18, 2013  09:17 am
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் வாகோ நகருக்கு அருகில் உள்ள உரத்தொழிற்சாலையில் இலங்கை நேரப்படி இன்று அதிகாலை வெடிவிபத்து ஏற்பட்டது.

இதனால் அருகில் இருந்த பல கட்டிடங்களுக்கும், வீடுகளுக்கும்  தீப்பரவல் ஏற்பட்டது. இந்த கட்டடங்களில் பலர் சிக்கி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அங்கு விரைந்து வந்த தீ அணைப்புத் துறையினர் தீயை அணைக்க போராடி வருகின்றனர். இந்தப் பணியில் 6 ஹெலிகாப்டர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இந்த விபத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

அவர்களை மீட்கும் பணியில் தீயணைப்பு வீரர்களும், பாதுகாப்பு படையினரும் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

இது தற்செயலாக நிகழ்ந்த விபத்தா அல்லது தீவிரவாதசெயலா? என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தொழிற்சாலைக்கு அருகில் இருந்த மருத்துவமனை ஒன்றும் பலத்த சேதமடைந்துள்ளது.

இதனால் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

thamilan thanks

No comments:

Post a Comment