அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Tuesday, 2 April 2013

காங்கிரஸ் கட்சியையே காந்தி கலைக்கச் சொன்னார் : வெளுத்து வாங்கிய ஜெ.


காங்கிரஸ் கட்சியையே காந்தி கலைக்கச் சொன்னார் : வெளுத்து வாங்கிய ஜெ.
April 2, 2013  03:14 pm
காங்கிரஸ் கட்சியையே மகாத்மா காந்தி கலைக்கச் சொன்னார். ஆனால், காங்கிரஸ் கட்சியிலேயே உள்ள பலருக்கு காங்கிரஸ் பற்றிய வரலாறே தெரியவில்லை என்று முதல்வர் ஜெயலலிதா அந்தக் கட்சியை இன்று சட்டமன்றத்தில் வெளுத்து வாங்கினார்.

சட்டசபையில் அவர் இன்று பேசியதாவது....

நேற்று உள்ளாட்சித் துறைக்கான மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றபோது அதில் கலந்து கொண்டு காங்கிரஸ் உறுப்பினர் விஜயதாரணி பேசும்போது சில கருத்துக்களைத் தெரிவித்தார். அப்போது உள்ளாட்சித் துறை அமைச்சர் கே.பி. முனுசாமி குறுக்கிட்டு இந்திய நாடு விடுதலை அடைந்த பிறகு, மகாத்மா காந்தி காங்கிரஸ் கட்சியையே கலைத்து விட வேண்டுமென்று கூறினார் என்று சொன்னார்.

அப்போது உறுப்பினர் காங்கிரஸ் உறுப்பினர் பிரின்ஸ் குறுக்கிட்டு, மகாத்மா காந்தி அப்படி சொல்லவே இல்லை என்றார். கூடவே, விஜயதாரணியும் ´ஆமாம் மகாத்மா காந்தி அப்படி சொல்லவே இல்லை´ என்றார்.

வேறு சில உறுப்பினர்கள் அப்போது குறுக்கிட்டு இது வரலாறு, வரலாற்று உண்மை என்றார்கள். அப்போது உறுப்பினர்கள் பிரின்சும்,விஜயதாரணியும் மகாத்மா காந்தி இப்படி சொன்னதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்றார்கள்.

ஆதாரம் இருக்கிறது. அந்த ஆதாரத்தை கையிலே வைத்துக் கொண்டு பேச வேண்டும் என்பதற்காகத்தான் நேற்று நான் பேசாமல் இருந்தேன். மகாத்மா காந்தி 30.1.1948 அன்று கொலை செய்யப்பட்டார். மகாத்மா காந்தி படுகொலை செய்யப்படுவதற்கு ஒரு நாள் முன்பு, அதாவது 29.1.1948 அன்று காங்கிரஸ் கட்சிக்கான ஒரு வரைவு சட்டத் திட்ட விதிகளை எழுதி அவர் அனுப்பினார். இது மகாத்மா காந்தி கொலை செய்யப்பட்ட பிறகு, 7.2.1948 அன்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளர் ஆச்சார்யா ஜூகல் கிஷோர் என்பவரால் வெளியிடப்பட்டது.

இதுபற்றிய புத்தகம் 1984ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வெளியானது. இந்தப் புத்தகத்திற்கு முன்னாள் காங்கிரஸ் கட்சித் தலைவரும், அன்றைய பிரதமருமான இந்திரா காந்தி முன்னுரை எழுதி இருக்கிறார்.

மகாத்மா காந்தி தன் கைப்பட எழுதிய காங்கிரஸ் கட்சிக்கான வரைவு சட்ட திட்ட விதிகளில் அவர் பல காரணங்களுக்காக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி என்ற இந்த காங்கிரஸ் அமைப்பையே கலைத்துவிடுவது என்று முடிவு செய்கிறது என்று எழுதி இருக்கிறார்.

ஆகவே, காங்கிரஸ் கட்சியிலேயே உள்ள பலருக்கு காங்கிரஸ் பற்றிய வரலாறே தெரியாமல் அவர்கள் இங்கே பேசிக்கொண்டு இருக்கிறார்கள் என்பதற்கு இதுதான் தக்க ஆதாரம் என்றார் ஜெயலலிதா.

/thamilan. thanks

No comments:

Post a Comment