
இங்கிலாந்தில் ஆரம்பப் பாடசலையில் படிக்கும் சிறார்கள்
பெருமளவில் இணையதள ஆபாசத்திற்கு அடிமையாகி வருவதாக புள்ளிவிவரத் தகவல்கள்
தெரிவிக்கின்றன.
வருடம்தோறும் ஆரம்பப் பாடசலை சிறார்கள் 3000 பேர்
இணையதளங்களில் ஆபாசப் படம் பார்த்தும், ஆபாச
நிகழ்ச்சிகளைப் பார்த்தும் சிக்கி பாடசலைகளை விட்டு வெளியேற்றப்படும் நிலை
உள்ளதாம்.
எதிர்பார்த்ததை விட டீன் ஏஜ் வயதிலும், அதற்கு
முந்தைய வயதிலும் பெருமளவிலான சிறார்கள் ஆபாசத்திற்கு அடிமையாகியிருப்பதாகவும்
இதுதொடர்பான ஆய்வில் ஈடுபட்ட அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.
இங்கிலாந்து பாடசலைகளைப் பொறுத்தவரை சராசரியாக ஒவ்வொரு
நாளும் 15 சிறார்கள்,
செக்ஸ் தொடர்பான புகார்களில் சிக்கி பாடசலையை விட்டு
நீக்கப்படுகிறார்களாம்.
இந்த 15
பேரில் குறைந்தது ஒருவர் ஆரம்பப் பாடசலை மாணவராக இருக்கிறாராம்.
சிறார்களைப் பொறுத்தவரை அவர்கள் எஸ்.எம்.எஸ்.மூலம்தான்
பெருமளவில் பாலியல் சேட்டைகளில் ஈடுபடுகிறார்களாம். கூடப் படிக்கும் மாணவிகளுக்கு
செக்ஸியான எஸ்.எம்.எஸ். அனுப்புவது, படம்
அனுப்புவது ஆகியவைதான் அவர்கள் செய்யும் பெரிய சேட்டைகளாகும்.
சிறார்களில் பெரும்பாலானோர் பிளேபாய் பத்திரிக்கையை
படிக்கும் பழக்கம் உடையவர்களாக உள்ளனராம். பிளேபாய் பத்திரிக்கையில் வரும் படங்களை
கத்தரித்து பென்சில் பாக்ஸில் வைப்பது, நோட்டுப் புத்தகத்தில் ஒட்டுவது ஆகிய பழக்கங்களில்
ஈடுபடுகிறார்களாம். பெரும்பாலும் அவை நிர்வாணப் படங்களாகும்.
இங்கிலாந்தில் மட்டுமல்ல உலகம் பூராவும் இதே பிரச்சினைதான்.
thamilan. thanks
No comments:
Post a Comment