அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Tuesday, 16 April 2013

வட கொரிய எல்லை அருகே வீழ்ந்தது அமெரிக்க ராணுவ ஹெலிகாப்டர்!



on 16 April 2013.
கொரியா பகுதியில் எந்த நிமிடமும் யுத்தம் வெடிக்கலாம் என்று பதட்டம் காணப்படும் நிலையில், இன்று (செவ்வாய்க்கிழமை)  அமெரிக்க ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளாகியது. தென் கொரியாவையும் வட கொரியாவையும் பிரிக்கும் எல்லைப் பகுதியில் தற்போது கடும் பதட்டநிலை நிலவுகிறது.

தென்கொரியா பகுதியில் அமெரிக்க ராணுவ ஹெலிகாப்டர் பறந்து கொண்டிருந்தபோது, எந்திர கோளாறு ஏற்பட்டது. அதையடுத்து ஹெலிகாப்டர் பைலட், எமர்ஜென்சி லேன்டிங் செய்ய முயன்றபோது ஹெலிகாப்டர் தென் கொரியா பகுதிக்குள் தரையில் மோதியது. தென் கொரியாவில் உள்ள அமெரிக்க ராணுவ முகாம் செய்தித் தொடர்பாளர் இந்த விபத்தை உறுதி செய்துள்ளார்.


Marine Super Stallion CH-53E ரக ஹெலிகாப்டரே விபத்துக்குள்ளானது என கூறியுள்ள அவர், அதில் பயணம் செய்த 21 பேரும் உயிர் தப்பினர் என்றார். எல்லையருகே ஹெலிகாப்டரில் கோளாறு ஏற்பட்ட நிலையில், வட கொரிய எல்லைக்கு உள்ளே ஹெலிகாப்டர் சென்றிருந்தால், உடனே சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கும். தென் கொரியாவில் உள்ள அமெரிக்க முகாம்களில் மொத்தம் 28,000 அமெரிக்கர்கள் உள்ளனர்.

News : Source


/eutamilar thanks

No comments:

Post a Comment