வங்கிக் கணக்குகளைத் திருடும் வைரஸ்: மக்களுக்கு எச்சரிக்கை
[ வியாழக்கிழமை, 25 ஏப்ரல் 2013,
இணையதளங்கள் மூலமாக "ராம்னிட்' என்ற
புதிய வைரஸ், கணனிகளில் வேகமாக பரவி வருவதாக மத்திய "சைபர் செக்யூரிட்டி ஏஜென்சி'
வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இது குறித்து, மத்திய "சைபர் செக்யூரிட்டி ஏஜென்சி' வட்டாரங்கள் தகவல்
தெரிவிக்கையில்,
இணையதளங்களிலிருந்து, ஏதாவது ஒரு தகவலை பதிவிறக்கம் செய்யும்போது, அந்த வைரசும்
பதிவிறக்கமாகி விடுகிறது.
இந்த வைரஸ் மூலமாக, சம்பந்தபட்ட கணனிகளில் உள்ள வங்கி கணக்கு எண், அதன்
"பாஸ்வேர்ட்' போன்ற முக்கிய விவரங்களை, சமூக விரோதிகள் திருடி சம்பந்தபட்டவரின்
வங்கி கணக்கிலிருந்து, பணத்தை தங்கள் கணக்கிற்கு சட்ட விரோதமாக
மாற்றிவிடுகின்றனர்.
இதனால், கணனிகளில் வங்கி கணக்கு குறித்த தகவல்களை வைத்திருப்பவர்கள்,
எச்சரிக்கையாக செயல்பட வேண்டும்
No comments:
Post a Comment