
வரைபடத்தில் பிலிப்பைன்ஸ்
பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு சவுதி அரேபியாவில்
விதிக்கப்பட்ட மரண தண்டனை நிறைவேற்றப்படுவதைத் தடுக்க, ஒரு மிலியன் டாலர்கள் தொகையை
பொதுமக்கள் நன்கொடை மூலம் திரட்ட பிலிப்பைன்ஸ் அரசு மக்களிடம் கோரிக்கை
வைத்திருக்கிறது.பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த தொழிலாளியான ஜோசெலிடொ ஸப்பனட்டா, சவுதி அரேபியாவில் அவர் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளரைக் கொன்றதற்காக மரண தண்டனை விதிக்கப்பட்டார்.
ஆனால் சவுதி அரேபியாவின் சட்டப்படி, கொலை செய்யப்பட்டவரின் குடும்பத்துக்கு அவர்கள் கேட்கும் தொகையை தந்துவிட்டால், குற்றம்சாட்டப்பட்டவர் விடுதலை செய்யப்படுவார்.
இது வரை சுமார் 130,000 டாலர்கள் திரட்டப்பட்டுவிட்டது. சௌதி அரேபிய அரசு இந்தத் தொகையை தருவதற்கான கால அவகாசத்தை நவம்பர் மாதம் வரை நீட்டித்திருக்கிறது.
bbc.co.uk thanks
No comments:
Post a Comment