அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Saturday 27 April 2013

கர்ப்பிணிகள் சாப்பிட வேண்டிய பழங்கள்


[ சனிக்கிழமை, 27 ஏப்ரல், 2013, ]
கர்ப்பிணிகள் சாப்பிட வேண்டிய
கர்ப்பிணிகள் எதையும் சாப்பிடுவதற்கு முன்பும் ஒரு முறைக்கு இரண்டு முறை யோசித்து பின் தான் சாப்பிட வேண்டும்.. ஏனெனில் சில உணவுகள் கருவில் இருக்கும்குழந்தைக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் தன்மை கொண்டவை. அதிலும் முதல் முறை கர்ப்பமானவர்களாக இருந்தால், எப்போதுமே அதிக கவனத்துடன் இருக்க வேண்டும்.

குறிப்பாக கர்ப்பிணிகள் மேற்கொள்ளும் டயட்டில் நிச்சயம் அதிகப்படியான ஆரோக்கியமான மற்றும் ஊட்டச்சத்துள்ள உணவுகளை தினமும் உட்கொள்ள வேண்டும்.

அதிலும் காய்கறிகளில் கீரைகள், கேரட், ப்ராக்கோலி, குடைமிளகாய், பீன்ஸ், பருப்புகளும் மற்றும் தயிர், ஓட்ஸ், நட்ஸ், முட்டை போன்றவற்றையும் உட்கொள்ள வேண்டியது அவசியம். பழங்களில் பப்பாளி மற்றும் அன்னாசி கருவிற்கு ஆபத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு இருப்பதால், இதனை தவிர்க்க வேண்டும். கர்ப்பிணிகள் எந்த பழங்களை சாப்பிடலாமல் என்று பார்க்கலாம்.

• ஃபோலிக் ஆசிட் அதிகம் நிறைந்திருக்கும் பழங்களில் அவகேடோவும் ஒன்று. கர்ப்பிணிகள் இந்த பழத்தை சாப்பிட வேண்டியது மிகவும் அவசியம்.

• மாம்பழம் சுவையான பழம் மட்டுமின்றி, ஆரோக்கியமான பழமும் கூட. இந்த பழத்தை கர்ப்பிணிகள் சாப்பிட்டால், செரிமானம் நன்கு நடைபெறுவதோடு, இதில் அவர்களுக்கு தேவையான வைட்டமின் ஏ மற்றும் சி அதிகம் உள்ளது.

• நிறைய பெண்கள் திராட்சை கருவிற்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்று நினைக்கிறார்கள். ஆனால், திராட்சையில் உள்ள வைட்டமின் ஏ, மெட்டபாலிக் அளவை சீராக வைக்கும். மேலும் திராட்சையில் ஃபோலேட், பொட்டாசியம், பாஸ்பரஸ், மக்னீசியம் மற்றும் சோடியம் அதிகம் உள்ளதால், கர்ப்பிணிகள் சாப்பிடுவது நல்லது.

• எலுமிச்சையை ஜூஸ் போட்டு கர்ப்பிணிகள் சாப்பிட்டால், அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் கருவிற்கு மிகவும் நல்லது. அதுமட்டுமின்றி, இது கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் குமட்டல், காலை அசௌகரியம், செரிமான பிரச்சனை போன்றவற்றை சரிசெய்யும்

viyapu thanks

No comments:

Post a Comment