எரிவாயு டேங்கர் வெடித்து 18 பேர் பலி, 36 பேர் காயம்: மெக்சிகோ எங்கும் புகை மண்டலம்
மே 2013,
மெக்சிகோ சிட்டியின் புறநகரான இகாடெபக்கில் இன்று காலை எரிவாயு டேங்கர் லாரி ஒன்று திடீரென வெடித்து தீப்பிடித்தது.
இதன் காரணமாக அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள், வாகனங்கள் கடுமையாக சேதம் அடைந்தன. பல வாகனங்கள் தீப்பிடித்து முற்றிலும் கருகின. இதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது.
கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்தில் 18 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். 36 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இறப்பு எண்ணிக்கை உயரக் கூடும் என்று மெக்சிகோ மக்கள் பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.
மெக்சிகோ சிட்டி-பச்சுகா நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த எரிவாயு டேங்கர் லாரி, பயணிகள் பஸ்சுடன் மோதியதால் டேங்கர் வெடித்தாக கூறப்படுகிறது.
No comments:
Post a Comment