திண்டுக்கல், மே.8-
திண்டுக்கல்லில் கடந்த ஒன்றரை மாதங்களுக்கு மேலாக கோடைவெயில் கொளுத்தி வருகிறது. தினமும் சராசரியாக 100 டிகிரிக்கு மேல் வெயில் கொளுத்தி வருகிறது.
அக்னி நட்சத்திரம் தொடங்கிய நிலையில் நேற்றும் 100.5 டிகிரி வெயில் மக்களை வாட்டி வதைத்தது. கொதிக்கும் கோடை வெயில் காரணமாக மக்கள் வெளியே நடமாடவே அச்சப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனினும், வெப்பத்தில் தவிக்கும் மக்களை குளிர்விக்கும் வகையில் அவ்வப்போது மழை பெய்கிறது. அதன்படி நேற்று மதிய வேளைக்கு பின்னர் வானில் மேகக்கூட்டங்கள் திரளத் தொடங்கின. இதனால் வெயிலின் உக்கிரம் கொஞ்சம், கொஞ்சமாக குறைய தொடங்கியது.
இந்த நிலையில் மாலையில் திடீரென காற்றுடன் மழை பெய்யத் தொடங்கியது. சுமார் 30 நிமிடங்களுக்கு நல்ல மழை பெய்து. பின்னர் சிறிது நேரம் சாரல் போன்று பெய்தது. இதன் காரணமாக திண்டுக்கல்லில் உஷ்ண மான நிலை மாறி, இதமான குளிர் நிலவியது. வியர்வை குளியலால் தொண்டை வறண்டு, உடல் சோர்வாகி தவித்து வந்த மக்கள் திடீர் கோடைமழையால் மகிழ்ச்சி அடைந்தனர்.
நத்தம் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கோடை வெப்பத்தின் தாக்கத்தால் பொதுமக்கள் அவதி அடைந்து வந்தனர். இரவு நேரங்களில் மிகுந்த வெப்பம் காரணமாகவும், தொடர் மின் வெட்டாலும் இந்த ஆண்டு தூங்கக்கூட முடியாமல் மிகுந்த வேதனையில் பொதுமக்கள் இருந்து வருகின்றனர்.
மேலும் கண்மாய், குளப்பகுதிகளிலும் வறட்சி மேலோங்கி நீர் இல்லாததாலும் ஆடு, மாடுகள் மேய்ச்சல் தரைகளில் புற்கள் இன்றியும் அவதிப்பட்டு வந்தன. இந்நிலையில் நேற்று மாலை நத்தம் பகுதியில் மாலை சுமார் 6 மணி முதல் 7 மணி வரை ஒரு மணி நேரம் மின்னல், இடியுடன் மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழை வெள்ளம் உருண்டு ஓடியது.
கத்தரி வெயிலில் தத்தளித்த இப்பகுதி மக்களுக்கு ஆறுதலாக இந்த மழை உதவியது. அத்துடன் அனல் காற்று குறைந்து குளிர்ந்த காற்று வீசியது.

maalaimalar thanks
No comments:
Post a Comment