அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Saturday, 11 May 2013

பெரம்பலூர் கார் விபத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. உள்பட 4 பேர் பலி


[ சனிக்கிழமை, 11 மே 2013,
சென்னை ஆரியபுரத்தை சேர்ந்தவர் மைலாப்பூர் தொகுதி தி.மு.க. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராமஜெயம். இவரது மகன் செந்தில் (வயது 34).
இவர் தனது மனைவி உறவினர்களுடன் திருச்செந்தூர், பழனி கோவிலுக்கு செல்ல திட்டமிட்டார். அதன்படி நேற்று முன்தினம் ஸ்கார்பியோ காரில் குழந்தைகள் உள்பட 8 பேர் சென்னையில் இருந்து புறப்பட்டனர்.

நேற்று காலை திருச்செந்தூரில் சாமி தரிசனம் செய்துவிட்டு மாலையில் பழனி திரும்பினர். அங்கிருந்து இரவு சென்னை திரும்பிக்கொண்டு இருந்தனர். காரை டிரைவர் சீனிவாசன் என்பவர் ஓட்டிவந்தார்.
இந்தநிலையில் அந்த கார் இன்று அதிகாலை 4 மணிளவில் பெரம்பலூர் மாவட்டம் பாடாலூரை அடுத்த விஜயகோபாலபுரம் என்ற கிராமம் அருகே உள்ள எம்.ஆர்.எப். டயர் தொழிற்சாலை எதிரே வந்து கொண்டிருந்தது.

அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி ரோட்டோரம் இருந்த பாலத்தின் தடுப்புச் சுவரில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்தது. காரில் பயணம் செய்த குழந்தைகள் உள்பட அனைவரும் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தனர். கார் கவிழ்ந்ததும் காருக்குள் இருந்த அனைவரும் கூச்சல் போட்டனர்.

இந்த கோர விபத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. ராமஜெயத்தின் மகன் செந்தில், உறவினரான சென்னை அயனாவரத்தை சேர்ந்த லோகநாதன் (45), அவரது மனைவி ரேணு லட்சுமி (40), விழுப்புரம் மாவட்டம் ஏமாப்பூரை சேர்ந்த தலைமை காவலர் ரமேஷ் (38) ஆகிய 4 பேரும் காருக்குள்ளேயே உடல் நசுங்கி பலியானார்கள்.

மேலும் இந்த விபத்தில் பலியான செந்திலின் மனைவி கவிதா, ரமேசின் மனைவி ஆனந்தி, லோகநாதனின் மகன் தருண்பிரகாஷ் (9), கார் டிரைவர் சீனிவாசன் ஆகிய 4 பேரும் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர்.
அந்த வழியாக சென்றவர்கள் கொடுத்த தகவலின் பேரில் சம்பவம் நடந்த இடத்துக்கு வந்த பாடாலூர் போலீசார் மற்றும் பொதுமக்கள் மீட்பு பணியை முடுக்கிவிட்டனர்.

கார் கதவை உடைத்த அவர்கள் உயிருக்கு போராடிய 4 பேரையும் மீட்டு பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்சில் அனுப்பி வைத்தனர். மேலும் பலியானவர்களின் உடல்களும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. விபத்து தொடர்பாக பாடாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


newindianews thanks

No comments:

Post a Comment