அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Saturday, 11 May 2013

இவ் வருட முடிவில் மின்வெட்டு இல்லை: மின்வாரிய இயக்குனர்

[ சனிக்கிழமை, 11 மே 2013,
மதுரையில் நடந்த கருத்து கேட்பு கூட்டத்தில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர் மான கழகத்தின் நிதி இயக்குனர் ராஜகோபால் கூறியதாவது:-
தமிழகத்தில் சென்ற வருடம் பருவமழை பெய்யாததால் சுமார் 3 ஆயிரம் யூனிட் மின்சார உற்பத்தி இழப்பு ஏற்பட்டது. இந்த நிலையில், மத்திய அரசின் பெல் நிறுவனம் மூலம் ரூ.45 கோடி செலவில் குத்தாலத்தில் உள்ள எரிவாயு மின் நிலையம் பழுது நீக்கப்பட்டு வருகிறது.
வட சென்னையில் உள்ள 1200 மெகாவாட் அனல்மின் நிலையத்தில் விரைவில் பிரிவு1 ல் (பிரிவு) உற்பத்தி தொடங்க உள்ளது. பிரிவு2-ல் சோதனை ஓட்டம் நடந்து வருகிறது. மேட்டூரில் கடந்த நவம்பர் மாதம் முதல் 450 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

தேசிய அனல் மின் வாரியத்துடன்(என்.டி.பி.சி.) கூட்டாக இணைந்து 1500 மெகாவாட் மின் உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது. இதில் பிரிவு1 ல் உற்பத்தி தொடங்கியுள்ளது. பிரிவு2 ல் சோதனை ஓட்டம் நடக்கிறது.
இந்த ஆண்டு இறுதிக்குள் பிரிவு3-ல் உற்பத்தி தொடங்கி விடும். நெய்வேலி நிலக்கரி நிறுவனத்துடன் இணைந்து தூத்துக்குடியில் 1500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட உள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் 4000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். வருகிற டிசம்பர் மாதம் முதல் தமிழகத்தில் மின் வெட்டு அறவே இருக்காது.

இது தவிர, உடன்குடி, எண்ணூரில் 3,300 மெகா வாட் மின்சாரம் அனல் மின் நிலையம் மூலம் உற்பத்தி செய்யப்பட உள்ளது. தமிழகத்தில் உள்ள 14 லட்சத்து 20 ஆயிரம் குடிசை வீடுகளில் 15 ஆயிரம் வீடுகளுக்கு சோதனை அடிப்படையில் 2 சி.எப்.எல்.பல்புகள் கொடுக்கப்பட்டு உள்ளன. இந்த பல்புக்கு ரூ.60 செலவாகிறது.
இதில் 45 ரூபாயை அரசு மானியமாக கொடுக்கிறது. ஆண்டுக்கு 100 துணை மின் நிலையங்கள் அமைக்க திட்டமிட்டுள்ளது. மின் இழப்பை தடுக்க 110 நகரங்களில் ரூ.4ஆயிரம் கோடி செலவில் சிறப்பு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

மின் திருட்டை தடுக்க போலீஸ் ஐ.ஜிக்கள் தலைமையில் 17 அமலாக்க பிரிவு உருவாக்கப்பட்டு உள்ளது. ஒரு பறக்கும் படை மற்றும் 40 ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகள் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 15 லட்சத்து 50 ஆயிரம் ஒற்றை மின்சார மீட்டர்கள் மற்றும் 7 லட்சத்து 50 ஆயிரம் 3 பிரிவு மின்சார மீட்டர்களும் வழங்கப்பட்டு உள்ளன.

தேவையான அளவு மீட்டர்கள் கைவசம் உள்ளன. இனியும் மீட்டர் தட்டுப்பாடு இருக்காது. தமிழகத்தில் உள்ள 34 பன்னாட்டு நிறுவனங்களுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படுவது இல்லை. உள்நாட்டு கட்டண மே வசூலிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

newindianews thanks

No comments:

Post a Comment