அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Sunday 26 May 2013

சேவை சரி இல்லாததால் 43 ஆயிரம் பி.எஸ்.என்.எல். டெலிபோன் திருப்பி ஒப்படைப்பு

  [ஞாயிறு - 26 மே-2013 - 01:19:57 மாலை ]
நவீன தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக செல்போன் உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தகவல் தொடர்புத் துறையில் தனியார் நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு சலுகைகளை அறிவித்து வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது. இதற்கு இணையாக மத்திய அரசின் நிறுவனமான பி.எஸ்.என்.எல். பல்வேறு சலுகைகளை வழங்குகிறது. ப்ரீபெய்டு, போஸ்ட் பெய்டு, பிராட்பேண்ட், ஜி.பி.ஆர்.எஸ். உள்ளிட்ட பல சேவைகளை அளித்து வருகிறது. தரைவழி டெலிபோன் இணைப்பு வாடிக்கையாளர்கள் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் கடந்த சில வருடங்களாக குறைந்து வருகிறார்கள். வீடுகள், அலுவலகங்களில் டெலிபோன் இணைப்பு வைத்திருந்தவர்கள் மொபைல் போனுக்கு மாறி வருவதே இதற்கு முக்கிய காரணம். தரைவழி டெலிபோன் பில் தொகையைவிட மொபைல் போன் கட்டணம் குறைவாக இருப்பதால் பி.எஸ்.என்.எல். மற்றும் தனியார் செல்போன் சேவைக்கு மாறி விடுகிறார்கள். சென்னையில் மட்டும் கடந்த 5 வருடத்தில் 5 லட்சத்திற்கும் மேலான டெலிபோன் இணைப்புகள் திருப்பி ஒப்படைக்கப்பட்டன. டெலிபோன் இணைப்புகளை சரண்டர் செய்வதற்கு மற்றொரு காரணம் பி.எஸ்.என்.எல்-ன் மிக மோசமான சேவை மற்றும் டெலிபோன் இணைப்பில் பழுது, செயல்படாமல் இருந்தால் அதுபற்றி புகார் கொடுத்தால் அவற்றை சரிசெய்ய குறைந்தது 15 நாட்கள் ஆகிவிடுகிறது. சில நேரம் மாத கணக்கில் கூட கண்டு கொள்ளாமல் போட்டு விடுகின்றனர். இதனால் விரக்தி அடைந்த வாடிக்கையாளர்கள் டெலிபோன் இணைப்புகளை ஒப்படைத்து விடுகின்றனர். சிலர் பணம் கட்டாமல் விட்டு விடுகின்றனர். இதனால் இணைப்பு துண்டிக்கப்பட்டு விடுகிறது.2012-13 நிதியாண்டில் மட்டும் சென்னை பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் மட்டும் 43 ஆயிரம் டேலிபோன் இணைப்புகள் சரண்டர் செய்யப்பட்டுள்ளது. இதில் 25,698 வாடிக்கையாளர்கள் பில் கட்டாமல் விட்டதால் துண்டிக்கப்பட்டதாகும். பி.எஸ்.என்.எல். சேவை முற்றிலும் மாறிவிட்டது. டெலிபோன் தொடர்பான புகார்களை சரிசெய்வதற்கு ஊழியர்கள் இல்லை. அதனால் பழுதுகளை சரி செய்ய காலதாமதமாகிறது. மேலும் புகார்கள் செய்ய தனியாரிடம் ஒப்பந்தம் கொடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் முறையாக புகார்களை கவனிப்பது இல்லை. அலட்சியமாகவும், மெத்தனப்போக்கில் இருப்பதாலும் ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்களை பி.எஸ்.என்.எல் இழந்து வருகிறது. காண்டிராக்ட் நிறுவனத்துக்கு பி.எஸ்.என்.எல். கொடுக்கவேண்டிய பில் தொகையை முறையாக செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது. கடந்த 2 வருடமாக பணம் கொடுக்காததால் டெலிபோன் பழுதுகளை அந்நிறுவனம் முறையாக பார்ப்பது இல்லை. பழுது குறித்த புகார்களை சரி செய்யாமல், பில் தொகை மட்டும் வாடிக்கையாளர்களுக்கு மாத வாடகையுடன் வசூலிக்கிறது. செயல்படாத டெலிபோனுக்கு வாடகை, பயன்பாட்டு கட்டணம், சேவை வரி என பில் போட்டு வசூலித்து விடுவதால் வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடைந்தனர்.இதுபற்றி புகார் கொடுத்தால் விசாரித்து நடவடிக்கை எடுப்பதற்குள் இணைப்பு துண்டாகிவிடும். பி.எஸ்.என்.எல். அதிகாரிகள், ஊழியர்களின் அலட்சிய போக்கால் பல ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் தனியார் நிறுவனங்களை நாடி செல்கிறார்கள். இதேநிலை தொடர்ந்து நீடித்தால் சென்னை உள்ளிட்ட அனைத்து நகரங்களிலும் பி.எஸ்.என்.எல். தனது செல்வாக்கை இழந்து விடும் என்பதில் சந்தேகம் இல்லை.


காணொளி செய்திகள்

tamilantelevision thanks

No comments:

Post a Comment