அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Tuesday 28 May 2013

தமிழகத்தில் விசைப்படகு மீனவர்களின் 45 நாள் தடை காலம் நாளையுடன் முடிகிறது


  [செவ்வாய் - 28 மே-2013 - 
மீன் இனப்பெருக்கத்துக்காக ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் 15-ந் தேதி முதல் மே 29-ந் தேதி வரை 45 நாட்கள் தமிழகத்தின் கிழக்கு கடற்கரை பகுதியான கன்னியாகுமரி வரை திருவள்ளூர் வரையில் விசைப்படகுகளில் ஆழ்கடலுக்கு சென்று மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. அதேபோல இந்த ஆண்டு கடந்த ஏப்ரல் 15-ந் தேதி இந்த தடை அமலுக்கு வந்தது. அன்று முதல் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் இருந்தனர். இதனால் உயர் ரக மீன்கள் வரத்து குறைந்து மீன்கள் விலையும் அதிகரித்தது. 45 தடை காலம் நாளையுடன் முடிவடைகிறது. இதையடுத்து மீனவர்கள் கடலுக்கு செல்ல தயாராகி வருகிறார்கள். இதற்காக படகுகளையும், வலைகளையும் பழுதுபார்த்து வர்ணம் தீட்டி வருகிறார்கள்.
கன்னியாகுமரியில் வருகிற 31-ந் தேதி மாதா வணக்க திருவிழா நடப்பதால் திருவிழா முடிந்து கன்னியாகுமரி, சின்னமுட்டம் பகுதி மீனவர்கள் 3-ந் தேதி முதல் கடலுக்கு மீன் பிடிக்க செல்கிறார்கள்.
காணொளி செய்திகள்

tamilantelevision thanks

No comments:

Post a Comment