அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Monday 27 May 2013

ஜேர்மனியில் பிள்ளையை ஒழுங்காக வளர்க்காத தாய்க்குத் தண்டனை

[ திங்கட்கிழமை, 27 மே 2013, 08:08.53 மு.ப GMT ]
ஜேர்மனியில் கடந்த 2009ம் ஆண்டில் ஒரு பள்ளிக்கூடத்தில் டிம் கிரட்ஷ்மர்(Tim Kretschmer) என்ற 17 வயது நிரம்பிய மாணவன் ஒருவன் அங்கிருந்த 14 பேரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றான்.
மேலும் இவனது துப்பாக்கிச் சூட்டால் 14 பேர் படுகாயமுற்றனர். இறுதியில் தன்னைத் தானே சுட்டுக்கொண்டு இறந்து போனான். இந்தச் சிறுவனின் தாயே இந்தக் கொலைகளுக்கும், பள்ளிக்கூடத்திற்கு மில்லியன் கணக்கில் ஏற்பட்ட சேதங்களுக்கும் பொறுப்பு என்று சட்டதரனிகள் கூறினர்.
பேடன் ஊர்ட்டம்பெர்கில் உள்ள விண்ணென்டன் நகரத்தில் உள்ள பள்ளி ஒன்றில் கிம் கிரட்ஷ்மர்(17) ஏற்படுத்திய சேதத்திற்கு 9.3 மில்லியன் யூரோ அவனது தாய் செலுத்த வேண்டும் என்று சட்டதரனிகள் தெரிவித்தனர்.
துப்பாக்கியை பத்திரமாக பூட்டி வைக்காதது பெற்றோரின் குற்றமாகும் என்றும் தாய் தன் கடமையைச் செய்யத் தவறியதால் ஏற்பட்ட விளைவு 15 பேரின் உயிரை பறித்ததற்கு காரணம் எனவும் வாதம் முன் வைக்கப்பட்டுள்ளது.
ஆனால் அவனது தாய் எரிக் சில்சரின்(Erik Silcher) சட்டதரனிகள் வாதடுகையில், 17 வயதுப் பையனை இரவும் பகலும் கண்காணிப்பது எந்தப் பெற்றோராலும் இயலாத காரியமாகும்.
எனவே தாயை இதற்குப் பொறுப்பாக்க முடியாது என்றும் அதே சமயம் குண்டு காயத்தால் சிகிச்சை பெற்று வருவோருக்கு 8.8 மில்லியன் யூரோ அளிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

newsonews thanks

No comments:

Post a Comment