அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Thursday, 2 May 2013

துருக்கி விமானப் பணிப்பெண்களுக்கு பிரகாசமான வண்ணங்களில் உதட்டுச்சாயம் பூச தடை

[ வியாழக்கிழமை, 02 மே 2013, 
கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக துருக்கியின் பிரதமர் பதவியில் இருக்கும் ரீசெப் டையின் எர்டொகென், இஸ்லாமியக் கோட்பாடுகளை உடைய கட்சியின் பிரதிநிதி ஆவார். துருக்கி ஒரு மதசார்பற்ற நாடாக விளங்கிய போதிலும், இவர் தனது அரசின் அணுகுமுறைகளால் மக்களை பழமைவாதிகளாகவும், சமயப் பற்றுள்ளவர்களாகவும் மாற்ற முயற்சிக்கின்றார் என்ற விமர்சனங்கள் அடிக்கடி எழுவதுண்டு.
அதற்கேற்றார்போல், தற்பொழுது துருக்கி விமானப் பணிப்பெண்கள் பிரகாசமான வண்ணங்களில் உதட்டுச்சாயம் பூச கூடாது என்று தடை விதித்துள்ளார்.
பிரதமரின் இந்த அறிவிப்பு, நாட்டை இஸ்லாமிய சார்பு நாடாக மாற்ற முயற்சிப்பதன் வெளிப்பாடு என்று மக்களிடையை தீவிர வாக்குவாதங்களை எழுப்பியுள்ளது.
அதனால் இதனை எதிர்க்கும் விதமாக, பெண்கள் பலரும் இணையதளத்தில் பளீச்சிடும் வண்ணங்களில் உதட்டுச்சாயங்களுடன் புகைப்படங்கள் வெளியிட்டுள்ளனர்.
ஆயினும் பணிபுரியும் இடத்தில் எளிமையான ஒப்பனையும், மென்மையான நிறங்களில் உதட்டுச் சாயங்களும் இருந்தாலே போதும் என்று விமான நிறுவனமும் பிரதமரின் செய்கையை ஆமோதித்துள்ளது.
கடந்த பெப்ரவரி மாதம், முழங்கால் தெரியும் அளவில் இருந்த இவர்களது சீருடைகள் மாற்றப்பட்டு, பாரம்பரியமான நீளமான ஸ்கர்ட்டுகளும், நீளத் தொப்பிகளும் செயல்முறைக்கு கொண்டுவரப்பட்டன.
மேலும் வளர்ந்து வருகின்ற உள்நாட்டு விமானசேவைகளில் சமீப காலமாக பயணிகளுக்கு மதுபானங்கள் அளிக்கப்படுவதும் நிறுத்தப்பட்டுள்ளது.

newsonews thanks

No comments:

Post a Comment